ஹோம் /நியூஸ் /உலகம் /

'விடுமுறை எடுக்கச் சொன்னேன்.. அவள் கேட்கவில்லை' - விமான விபத்தில் உயிரிழந்த பணிப்பெண்ணின் தந்தை உருக்கம்

'விடுமுறை எடுக்கச் சொன்னேன்.. அவள் கேட்கவில்லை' - விமான விபத்தில் உயிரிழந்த பணிப்பெண்ணின் தந்தை உருக்கம்

ஏர் ஹோஸ்டஸ் ஓஷின்

ஏர் ஹோஸ்டஸ் ஓஷின்

நேபாள விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக பணிபுரிந்த உயிரிழந்த ஓஷின் அலே மாகரின் தந்தை மோகன் ஒரு ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி ஆவார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, IndiaKathmanduKathmanduKathmandu

கடந்த ஜனவரி 15ஆம் தேதி நேபாள நாட்டின் பொக்ரா விமான நிலையத்தில் Yeti ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் போது திடீரென தீபிடித்து விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. 72 இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் 68 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் பயணித்துள்ளனர்.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.விபத்தில் 5 இந்திய பயணிகளும் உயிரிழந்துள்ளனர். மேலும், இதே விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக பணிபுரிந்த உயிரிழந்த ஓஷின் அலே மாகரின் தந்தை மோகன் ஒரு ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி ஆவார்.

நேபாளத்தில் உள்ள ஏர் ஹோஸ்டஸ் அகாடமியில் பயிற்சி பெற்ற ஓஷின் கடந்த இரு ஆண்டுகளாக யேட்டி விமான நிறுவனத்தில் ஏர் ஹோஸ்டசாக பணிபுரிந்து வந்துள்ளார். விபத்து நடந்த தினத்தில் ஓஷினை வேலைக்கு செல்ல வேண்டாம் என அவரது தந்தை அறிவுறுத்தியுள்ளார். சங்கராந்தி பண்டிகை காலத்தில் வேலைக்கு ஏன் செல்கிறாய், வீட்டில் இருந்து பண்டிகையை கொண்டாடலாம் என ஓஷினிடம் அவரது தந்தை வலியுறுத்தியுள்ளார்.

அதற்கு ஓஷின், இந்த ஒரு நாள் மட்டும் வேலையை முடித்து விட்டு வீட்டு வந்து பண்டிகையை கொண்டாடுகிறேன் என வாக்குறுதி தந்து சென்றுள்ளார். ஆனால், எனது மகள் கோர விபத்தில் உயிரிழந்து வாக்குறுதியை நிறைவேற்றமால் சென்றுவிட்டாள் என மோகன் கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.

இதையும் படிங்க: தொட முடியாத மாஃபியா.. 30 ஆண்டுகாலம் தப்பித்து ஓடிய ரவுடியை அசால்டாக கைது செய்த போலீஸ்!

உயிரிழந்த ஏர் ஹோஸ்டாஸ் ஓஷின் ஒரு டிக் டாக் பிரபலமாவார். இவர் விமானத்தில் எடுத்த டிக் டாக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த வீடியோ கடந்த ஆண்டு செப்டம்பரில் எடுக்கப்பட்டது. அந்த வீடியோவை பகிர்ந்துள்ள பலரும் இவ்வளவு துடிப்பான பெண்ணின் மறைவுக்கு இரங்கல்கள் என பதிவிட்டு வருகின்றனர்.

First published:

Tags: Flight Accident, Flight Crash, Nepal, Tik Tok, Viral Video