ஹோம் /நியூஸ் /உலகம் /

ரூ.200, ரூ.500, ரூ.2000 இந்திய ரூபாய் நோட்டுகளுக்குத் தடை

ரூ.200, ரூ.500, ரூ.2000 இந்திய ரூபாய் நோட்டுகளுக்குத் தடை

Adaptability: ஒரு பயனுள்ள பட்ஜெட் திட்டம் நிதி இழப்புக்களைச் சமாளிக்கவும் நிதி ஆதாயங்களை உணர்ந்து கொள்வதாகவும் இருக்க வேண்டும்.

Adaptability: ஒரு பயனுள்ள பட்ஜெட் திட்டம் நிதி இழப்புக்களைச் சமாளிக்கவும் நிதி ஆதாயங்களை உணர்ந்து கொள்வதாகவும் இருக்க வேண்டும்.

நேபாளத்தில் இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்ததையடுத்து, இந்தியா - நேபாள் இடையே வர்த்தகம் செய்யும் வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படக் கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

நேபாளத்தில் இந்திய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் காத்மாண்டுவில் நேற்று கூடிய அமைச்சரவையில் இந்திய மதிப்பில் 200, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

இந்திய ரூபாய் நோட்டுகள் நேபாளத்தில் புழக்கத்தில் இருந்து வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பணமதிபிழப்பு நடவடிக்கையின் போது, நேபாள வங்கிகள் அந்நாட்டில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது. அதன் பிறகுதான் இந்தியா ரூ.200, ரூ.500, ரூ.2000 நோட்டுகளை வெளியிட்டது.

இதனையடுத்து இந்த நோட்டுகள் பற்றிய எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் நேபாள அரசு இருந்து வந்தது. அதனால் அந்நாட்டு மக்கள் இந்தியா வெளியிட்ட புதிய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த ஆரம்பித்தனர்.

இந்நிலையில், தற்போது நேபாள அரசு ரூ.200, ரூ.500, ரூ.2000 ஆகிய இந்திய ரூபாய் நோட்டுகளை உபயோகிக்கக்கூடாது என்றும் அதற்கு தடையும் விதித்துள்ளது.

இதனால் இந்தியா - நேபாள் இடையே வர்த்தகம் செய்யும் வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படக் கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Also see... ஓரடி நிலத்துக்கு சண்டை... கொலையில் முடிந்து மொத்த குடும்பமும் சிறையில்....

Published by:Vaijayanthi S
First published:

Tags: Demonetisation