முகப்பு /செய்தி /உலகம் / நேபாளத்தில் இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு தடை: சுற்றுலா பயணிகளுக்கு சிக்கல்!

நேபாளத்தில் இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு தடை: சுற்றுலா பயணிகளுக்கு சிக்கல்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நேபாளத்தில் உள்நாட்டு பணத்துக்கு நிகராக இந்திய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதால் இதைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீர்மானித்தது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

நேபாள நாட்டில் 100 ரூபாயைவிட அதிக மதிப்பு கொண்ட இந்திய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேபாளம், தனி நாடாக இருந்தாலும் இந்தியர்கள் அந்நாட்டுக்குச் செல்வதற்கு விசா தேவையில்லை. மேலும், இந்திய ரூபாய் நோட்டுகளை நேபாளத்திலும் பயன்படுத்த முடியும். இந்நிலையில், நேபாளம் நாட்டில் உள்நாட்டு பணத்துக்கு நிகராக இந்திய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதால் இதைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீர்மானித்தது.

100 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய நோட்டுகளுக்கு தடை விதிக்க நேபாள அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்மானித்தது. அதனடிப்படையில், நேபாள நாட்டின் மத்திய வங்கி ஒரு  உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி, இந்திய ரூபாய் நோட்டுகளான 200, 500, 2000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவுக்கு உள்நாட்டில் வாழும் இந்தியர்களும், இந்தியாவில் இருந்து சுற்றுலா செல்பவர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.  இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 13 லட்சம் பேர் நேபாளத்துக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். 5 முதல் 8 நாட்கள்வரை அங்கு தங்கியிருக்கும் அவர்கள் சராசரியாக 11 ஆயிரம் ரூபாய் வரை செலவிடுகின்றனர்.

எனவே, பெரிய மதிப்பிலான இந்திய ரூபாய் நோட்டுக்கு தடை விதித்தால் அன்னியச் செலாவணியாக டாலர் அல்லது யூரோக்களை வாங்குவதில் பண இழப்பும் சிரமமும் ஏற்படும். அதனால் இந்த முடிவை அரசு பரிசீலிக்க வேண்டும் என பலதரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது.

Also see:

First published:

Tags: Indian Rupee