Home /News /international /

சீனாவிலிருந்து இன்னொரு கொரோனா வைரஸ் NeoCoV: இறப்பு விகிதம் 3-க்கு 1- பரவல் விகிதமும் அதிகம்-ஆய்வில் பகீர்

சீனாவிலிருந்து இன்னொரு கொரோனா வைரஸ் NeoCoV: இறப்பு விகிதம் 3-க்கு 1- பரவல் விகிதமும் அதிகம்-ஆய்வில் பகீர்

புதுவகை கொரோனா நியோகோவ் சீனா எச்சரிக்கை.

புதுவகை கொரோனா நியோகோவ் சீனா எச்சரிக்கை.

NeoCoV கொரோனா வைரஸ் குறித்து சீன ஆராய்ச்சியாளர்களால் பெறப்பட்ட தரவுகளை வெக்டர் ஆராய்ச்சி மையம் அறிந்திருக்கிறது. ஆனால் மனிதர்களிடையே தீவிரமாக பரவும் திறன் கொண்ட ஒரு புதிய கொரோனா வைரஸின் தோற்றம் அல்ல இது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
    பல நாடுகளில் கொரோனா வைரஸின் இன்னொரு வகையான ஓமைக்ரானின் அதிகரித்து வரும் நிலையில் சீனாவில் இருந்து மற்றொரு உருமாறிய வைரஸ் வகை தோன்றுவதாக தகவல்கள் வருகின்றன. . 2012 மற்றும் 2015 இல் மத்திய கிழக்கில் ஏற்பட்ட நோய்ப்பரவலுக்கான தொடர்புடைய மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி MERS-CoV என்பதன் மாறிய வகையான NeoCoV-புதிய கோவிட் வைரஸ் பற்றி சீன விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

    தென்னாப்பிரிக்காவில் உள்ள வெளவால்களிடத்தில் இது காணப்பட்டது, இன்றுவரை இந்த விலங்குகளிடையே பிரத்தியேகமாக பரவுகிறது, புதிய எச்சரிக்கையானது bioRxiv இணையதளத்தில் ப்ரீபிரிண்டில் வெளியிடப்பட்டுள்ளது. இது இன்னும் சக மதிப்பாய்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நியோகோவ் மற்றும் இதனுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள PDF-2180-CoV ஆகியவை வவ்வாலின் சில வகை என்சைம்களைப் பயன்படுத்தி மனித உடலுக்குள் நுழையும் என்று எச்சரித்துள்ளனர். இந்த புதிய கொரோனா வைரஸ் ACE2 ரிசப்டார்களுடன் முந்தைய கொரோனா வைரஸ்கள் போல் அல்லாமல் வேறு வகையில் பிணைத்துக் கொள்ளும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

    இந்த புதிய கொரோனா வைரஸ் MERS-CoV-ன் அதிக இறப்பு விகிதத்தையும் தற்போதைய SARS-CoV-2 கொரோனா வைரஸின் அதிக தொற்று வீதத்தையும் கொண்டது. MERS வைரஸின் அதி இறப்பு விகிதம் "சராசரியாக பாதிக்கப்பட்ட மூன்றில் ஒருவர் இறப்பதற்கு" வழிவகுக்கும் என்று ரஷ்ய வலைத்தளமான ஸ்புட்னிக் கூறுகிறது.

    இந்த ஆய்வு மெர்ஸ் தொடர்பான வைரஸ்களின் ACE2 பயன்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அதி இறப்புவிகிதம் மற்றும் அதிபரவல் சாத்தியங்களையும் இந்த நியோகோவ் ஏற்படுத்தும் என்று சீன விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

    மேலும், வுஹான் பல்கலைக்கழகம் மற்றும் சைனீஸ் அகாடமி ஆஃப் சயன்சஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோபிசிக்ஸ் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, மனித உயிரணுக்களில் வைரஸ் ஊடுருவுவதற்கு இந்த நியோகோவ் இன்னும் ஒரு முறை உருமாறினால் போதுமானது என்று கூறுகிறது.

    NeoCoV கொரோனா வைரஸ் குறித்து சீன ஆராய்ச்சியாளர்களால் பெறப்பட்ட தரவுகளை வெக்டர் ஆராய்ச்சி மையம் அறிந்திருக்கிறது. ஆனால் மனிதர்களிடையே தீவிரமாக பரவும் திறன் கொண்ட ஒரு புதிய கொரோனா வைரஸின் தோற்றம் அல்ல இது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
    Published by:Muthukumar
    First published:

    Tags: China, Corona, CoronaVirus

    அடுத்த செய்தி