• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • அமெரிக்கா - சீனா இடையேயான உறவை மேம்படுத்த பேச்சுவார்த்தை அதிகரிக்க வேண்டும்: சீன அதிபர்

அமெரிக்கா - சீனா இடையேயான உறவை மேம்படுத்த பேச்சுவார்த்தை அதிகரிக்க வேண்டும்: சீன அதிபர்

சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தையை அதிகரிக்க வேண்டும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
    அமெரிக்கா - சீனா இடையே உள்ள போட்டி மோதலாக மாறி விடாமல் தடுக்க பேச்சுவார்த்தை அவசியம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொளி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார். பெய்ஜிங்கில் இருந்து காணொளியில் இணைந்த ஷி ஜின்பிங், பைடனை பழைய நண்பரே என்று அழைத்து பேச்சை தொடங்கினார்.

    இரு நாடுகளுக்கு இடையே உள்ள போட்டி மோதலாக மாறி விடாமல் தடுக்க பேச்சுவார்த்தை அவசியம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இருந்தபடி ஷி ஜின்பிங்கிடம் வேண்டுகோள் வைத்தார்.

    இருநாடுகளும் இணைந்து செயல்பட்டு உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று ஷி ஜின்பிங் கேட்டுக்கொண்டார்.

    கொரோனா பெருந்தொற்று, காலநிலை மாற்றம் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ள அமெரிக்கா - சீனா இடையே ஆரோக்கியமான உறவு தேவை என்றும் சீன அதிபர் கேட்டுக்கொண்டார்.

    தைவான், உய்குர் இஸ்லாமிய மனித உரிமை மீறல், இணைய பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் இருநாட்டு தலைவர்கள் விவாதித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: