நீட் தேர்வு முறை இலங்கையிலும் நடைமுறையில் உள்ளது- இலங்கை அமைச்சர்

news18
Updated: April 15, 2018, 8:37 PM IST
நீட் தேர்வு முறை இலங்கையிலும் நடைமுறையில் உள்ளது- இலங்கை அமைச்சர்
news18
Updated: April 15, 2018, 8:37 PM IST
நீட் தேர்வு முறை, இலங்கையிலும் நடைமுறையில் உள்ளது என்று இலங்கை கல்வித்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

தேவகோட்டை அருகேவுள்ள சேது பாஸ்கரா விவசாயக் கல்லூரியில் இன்று நடைபெற்ற விழாவில் ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காவிரி நதி நீர்ப் பிரச்சனையில் போராட்டங்கள் அதிகரித்துள்ளன. இதில் சுமூகத் தீர்வை ஏற்படுத்த மத்திய அரசுடன், மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். காவிரி பிரச்னையை தீர்க்க இலங்கை அரசு தமிழக அரசிற்கு தோளோடு தோள் நிற்கும்.

நீட் தேர்வு முறை, இலங்கையிலும் நடைமுறையில் உள்ளது. மேலும், இங்கு மேற்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படுகிறது.

இலங்கை - தமிழக பாடத்திட்டங்களில் பரிமாற்றங்களை செய்துகொள்வது தொடர்பாக மாநில கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அதிகமான போதை பொருள்கள் கடத்தப்படும் சூழ்நிலையால் தான் தமிழக மீனவர்கள் பிரச்னையை சந்திக்கிறார்கள். சீனாவின் ஆதிக்கம் உலக நாடுகள் அனைத்திலும் உள்ளது என்றார் ராதாகிருஷ்ணன்.
First published: April 15, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்