பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்யும் பலவந்த முயற்சியில் ஈடுபட்டிருந்த போது, அவரின் கழுத்தை நெறித்ததால் மயக்க நிலைக்கு சென்ற பெண்ணிடம், “உன்னை காயப்படுத்த விரும்பவில்லை, எனக்கு செக்ஸ் மட்டுமே தேவை” என அந்த சமயத்திலும் அக்கொடூரச் செயலில் ஈடுபட்டிருப்பவன் பேசியிருப்பது வக்கிர மனநிலையில் உச்சத்தை தோலுரித்து காட்டியிருக்கிறது.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு குற்றச் சம்பவங்கள் சமூக பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் தற்செயலாக நடப்பதில்லை. பாலியல் வன்புணர்வு குற்றங்கள் நம் நாட்டில் மட்டுமல்ல பல வளர்ந்த நாடுகளிலும் இருக்கக் கூடிய பெரும் பிரச்னை. பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரின் வக்கிர மனநிலையை எடுத்துக் காட்டும் வகையில் ஒரு சம்பவம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அரங்கேறியிருக்கிறது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள மன்ஹேட்டன் நகரின் பாலத்தின் மீது கடந்த வியாழக்கிழமையன்று இரவு 7.30 மணி அளவில் 50 வயது பெண்மணி ஒருவரை அடித்து உதைத்து பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாக வழிப்போக்கர் ஒருவர் புகார் அளித்ததன் பேரில் 38 வயது ஆசாமி ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அன்றைய தினம் இரவில் ராண்டல்ஸ் தீவுப்பகுதியை மன்ஹாட்டனுடன் இணைக்கும் வார்ட்ஸ் தீவு பாலத்தின் மீது அந்த கொடூரச் செயல் அரங்கேறியிருக்கிறது.
Also read:
400 பேரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி.. அதிர்ச்சி சம்பவம்.
கைது செய்யப்பட்ட நபர் ஹோவர்ட் ஷா என தெரியவந்தது. சாலையில் சென்ற அந்த பெண்மணியை பாலியல் வன்புணர்வு செய்யும் நோக்கில் பலவந்தப்படுத்திய போது அந்த பெண்மணி ஷாவை எதிர்த்து போராடியிருக்கிறார். இதனால் அப்பெண்மணியை அடித்து உதைத்து அவரின் கழுத்தை நெறித்ததால் அப்பெண்மணி மயக்க நிலைக்கு சென்றுள்ளார். அந்த நேரத்திலும், ‘உன்னை காயப்படுத்த விரும்பவில்லை, எனக்கு தேவை செக்ஸ் தான்’ என கைது செய்யப்பட்ட ஷா அப்பெண்ணிடம் தெரிவித்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
Also read :
ரிக்ஷா ஓட்டுனர் குடும்பத்துக்கு தனது ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து எழுதி வைத்த பெண் - நெகிழ்ச்சி சம்பவம்
ஹோவர்ட் ஷா இவ்வாறு பேசியிருப்பது அவரது வக்கிர மனநிலையை எடுத்துரைத்திருக்கிறது, மேலும் ஷா மீது ஏற்கனவே பாலியல் வன்புணர்வு குற்றங்கள் இருப்பதும், அது போன்ற வழக்கில் சிக்கி சிறையில் இருந்து சமீபத்தில் தான் அவர் பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்ததும் தெரியவந்துள்ளது. 2012ல் பாலியல் வன்புணர்வு வழக்கில் சிக்கிய ஷா அதற்கு முன்னஹ்டாக கடந்த 2005ம் ஆண்டு 25 வயது பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததும் தெரியவந்தது. இது போன்ற நபர்கள் வெளியில் நடமாடுவது பெண்களுக்கு அச்சுறுத்தல் என்பதால் அவரை வெளியே விடக்கூடாது என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.