Home /News /international /

தண்ணீர், உணவின்றி உக்ரைனின் சுமி மாகாணத்தில் 800 இந்திய மாணவர்கள் சிக்கித் தவிப்பு

தண்ணீர், உணவின்றி உக்ரைனின் சுமி மாகாணத்தில் 800 இந்திய மாணவர்கள் சிக்கித் தவிப்பு

சுமி நகருக்குள் பேருந்துகள், ரயில்கள் செல்லும் பாதைகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், தெருக்களிலும் கடும் சண்டை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமி நகருக்குள் பேருந்துகள், ரயில்கள் செல்லும் பாதைகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், தெருக்களிலும் கடும் சண்டை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமி நகருக்குள் பேருந்துகள், ரயில்கள் செல்லும் பாதைகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், தெருக்களிலும் கடும் சண்டை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் நாட்டிலிருந்து இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், ரஷ்யாவின் தாக்குதல் நடைபெறும் இடங்களில் சுமார் ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை பேருந்துகள் மூலமாக உக்ரைனின் மேற்கு பகுதிக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

உக்ரைனின் கிழக்கு பகுதியில் இருக்கும் கார்கிவ் மற்றும் சுமி ஆகிய பகுதிகளில் ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இங்கு சுமார் ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களை மீட்பது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி கூறியதாவது-

உக்ரைனில் இருந்து கடைசி இந்தியர் மீட்கப்படும் வரை ஆபரேஷன் கங்கா தொடர்ந்து நடைபெறும். அதிகபட்சமாக உக்ரைனில் 3 ஆயிரம் இந்தியர்கள் தற்போது உள்ளதாக மதிப்பிட்டுள்ளோம்.
போர் நடந்து வரும் பகுதிகளில் இருக்கும் இந்திய மாணவர்களை வெளியேற்றுவதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இதுதொடர்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் ராணுவத்துடன் பேசப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் அவர்கள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார்கள். இது நமது மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக இருக்கும். என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க - உக்ரைனில் மேலும் ஒரு இந்தியர் சுடப்பட்டார்: மத்திய அமைச்சர் தகவல்

உக்ரைனின் சுமி மாகாணத்தில் சுமார் 800 இந்திய மருத்துவ மாணவர்கள் சிக்கியுள்ளனர். விடுதியில் இருக்கும் அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விடுதிக்கு வெளியே துப்பாக்கிச் சண்டை, குண்டுவீச்சு நடைபெறுவதாலும், அசாதாரண குளிர் நிலவுவதாலும் மாணவர்களின் நிலைமை கவலை அளிப்பதாக உள்ளது.

இதுதொடர்பாக மாணவர்கள் வெளியிட்டிருந்த வீடியோவில், 'ரஷ்யா எல்லையில் பேருந்துகள் எங்களுக்காக நிற்பதாக அரசிடம் இருந்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. ரஷ்யா எல்லை இங்கிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இப்போது நாங்கள் நடந்து சென்றால், அனைத்து திசைகளில் இருந்தும் எங்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் இங்கு வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.

இதையும் படிங்க - ரஷ்யாவின் தாக்குதலுக்கு இடையே உக்ரைனில் இந்திய மாணவர்களுக்கு பிரியாணி உணவு வழங்கிய தமிழர்..

இங்கிருந்து வெளியேறினாலே நாங்கள் கொல்லப்பட்டு விடுவோம் என்கிற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. இங்கு உணவு, குடிநீர், கழிவறைக்கான தண்ணீர் என எதுவும் கிடையாது. பலர் நேற்றிரவில் இருந்து தண்ணீர் குடிக்காமல் இருக்கின்றனர்' என்று தெரிவித்துள்ளனர்.

உக்ரைனின் கார்கிவ், சுமி மற்றும் கீவ் ஆகிய நகரங்களில் ரஷ்யா கடும் தாக்குதலை நடத்தக் கூடும் என்று இந்திய தூதரகம் கடந்த வாரம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்திய மாணவர்கள் சிக்கியுள்ள சுமி நகருக்குள் பேருந்துகள், ரயில்கள் செல்லும் பாதைகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், தெருக்களிலும் கடும் சண்டை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதத்தின் 3ம் வாரத்திலிருந்து தற்போது வரை 20 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனின் பக்கத்து நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைனின் பக்கத்து நாடுகளில் இருந்து 15 விமானங்கள் இந்தியா திரும்பியுள்ளன.
Published by:Musthak
First published:

Tags: Russia - Ukraine

அடுத்த செய்தி