Home /News /international /

உக்ரைன் - ரஷ்யா போர்: கடந்த 6 நாளில் 6000 ரஷ்ய வீரர்கள் பலி; உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அறிவிப்பு

உக்ரைன் - ரஷ்யா போர்: கடந்த 6 நாளில் 6000 ரஷ்ய வீரர்கள் பலி; உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அறிவிப்பு

Russia - ukraine war |  எதனை அடைவதற்காக இந்த உயிரிழப்பு? உக்ரைனை அடையவா? அது சாத்தியமற்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Russia - ukraine war | எதனை அடைவதற்காக இந்த உயிரிழப்பு? உக்ரைனை அடையவா? அது சாத்தியமற்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Russia - ukraine war | எதனை அடைவதற்காக இந்த உயிரிழப்பு? உக்ரைனை அடையவா? அது சாத்தியமற்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    உக்ரைன்  ரஷ்யா இடையேயான போரில் கடந்த 6 நாளில் 6000 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.

    ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு கூட்டமைப்பான நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் முயற்சி செய்துவந்தது. உக்ரைனின் இந்த முயற்சிக்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் உக்ரைன் அதைக் கண்டுகொள்ளவில்லை. அதனையடுத்து, உக்ரைன் நாட்டைச் சுற்றி ராணுவத்தை நிறுத்தியது ரஷ்யா.

    அதனைத் தொடர்ந்து யாரும் எதிர்பாராத வகையில் கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா ராணுவத் தாக்குதல் தொடர்ந்தது. இது உலக நாடுகளை பேரதிர்ச்சிக்குள்ளாகியது. அதனையடுத்து, ரஷ்யாவின் மீது உலக நாடுகள் தொடர்ந்து பொருளாதாரத்தடை விதித்து வருகின்றன.

    Also Read: முன்னாள் காதலியுடன் பேசிய இளைஞருக்கு கத்திக்குத்து - காதலன் வெறிச்செயல்

    ரஷ்யாவின் செயல்பாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்துவருகிறது. இந்த போரின் காரணமாக உக்ரைன் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, பெலாரஸ் நாட்டில் வைத்து உக்ரைன் மற்றும் ரஷ்யா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்தநிலையில்,போர் நடந்து வரும் கடந்த 6 நாளில் 6000 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மேலும் அவர் கூறும்போது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை நினைத்துப் பாருங்கள், கிட்டதட்ட 6000 ரஷ்யர்கள் இறந்துள்ளனர். எதனை அடைவதற்காக இந்த உயிரிழப்பு? உக்ரைனை அடையவா? அது சாத்தியமற்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Must Read : உக்ரைன் தலைநகர் கீவ்விலிருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேறிவிட்டனர் -மத்திய அரசு விளக்கம்

    ஏவுகணைகள், குண்டுகள், பீரங்கிகள் என எந்த தாக்குதல் கொண்டும் இதனை மாற்ற முடியாது. நாங்கள் எங்கள் சொந்த மண்ணில் இருக்கிறோம். எங்களுக்கு எதிரான போருக்காக அவர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் நிற்பார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

    மேலும், ரஷ்ய படையெடுப்புக்கு எதிரான ஒற்றுமை மற்றும் எதிர்ப்பிற்காக உக்ரேனியர்களை ஜெலென்ஸ்கி பாராட்டியுள்ளார்.

    அதில், ஹாலிவுட் நட்சத்திரங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை உலகம் முழுவதும், உங்களை பாராட்டுகின்றனர். இன்று உக்ரேனியர்கள் வெல்ல முடியாதவர்களின் அடையாளமாக இருக்கிறீர்கள் என்று அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

    எந்த நாட்டு மக்களும் எந்த நேரத்திலும், பூமியில் சிறந்த மனிதர்களாக மாற முடியும் என்பதற்கான அடையாளம் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Russia, Russia - Ukraine

    அடுத்த செய்தி