பெரு நாட்டில் பறவைக் காய்ச்சல் காரணமாக 585 கடல் சிங்கங்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்அமெரிக்க நாடான பெருவில் பாதுகாக்கப்பட்ட 8 கடலோரப் பகுதிகளில் 55,000 பறவைகள் உயிரிழந்திருப்பதை வனப் பாதுகாவலர்கள் கண்டறிந்தனர். இதில், 7 கடலோரப் பிராந்தியங்களில் உள்ள 585 கடல் சிங்கங்களும் அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், நாரைகள், பென்குவின்களும் உயிரிழந்தன. கடல் சிங்கங்களின் மாதிரிகளை ஆய்வுசெய்ததில் பறவைக்காய்ச்சல் காரணமாக அவை உயிரிழந்திருப்பது தெரியவந்தது. எனவே, கடற்கரைகளில் கடல் சிங்கங்கள் மற்றும் கடல் பறவைகளை நெருங்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு தேசிய வனவிலங்கு சேவைகள் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக, பறவைக் காய்ச்சல் காரணமாக, கோழிப்பண்ணையில் 37 ஆயிரம் பறவைகளை அதிகாரிகள் கடந்த டிசம்பர் மாதத்தில் அழித்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Animal disease, Bird flu, Peru