ஹோம் /நியூஸ் /உலகம் /

சரசரவென சரிந்த மண்.. புதைந்த பஸ்.. உயிரிழந்த 34 பேர்.. கொலம்பியாவில் சோக சம்பவம்!

சரசரவென சரிந்த மண்.. புதைந்த பஸ்.. உயிரிழந்த 34 பேர்.. கொலம்பியாவில் சோக சம்பவம்!

நிலச்சரிவு

நிலச்சரிவு

கிராமங்களுக்கு இடையே சாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதாக ஆஸ்திரேலிய அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

மத்திய கொலம்பியாவில் கடுமையான மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று புதைந்து 34 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொலம்பியா செய்தி அறிக்கையின்படி, ரிசரால்டா மாவட்டத்தில் அமைந்துள்ள பியூப்லோ ரிகோ நகரில், ஞாயிற்றுக்கிழமை நிலச்சரிவினால் நெடுஞ்சாலை ஒன்றில் மண் குவியல் சரிந்து சாலையை மூடியுள்ளது. இந்த நிலச்சரிவு ஏற்படும் போது அந்த சாலையில் சென்று கொண்டிருந்த 33 பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து, இரண்டு நபர்களை ஏற்றிச் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் ஆறு பேரை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றும் சிக்கிக்கொண்டது. இந்த மூன்று வாகனங்கள் மீதும் சுமார் இரண்டு மீட்டர் உயரத்திற்கு மண் குவிந்துள்ளது.

ரிசரால்டா மாவட்டத்தில் உள்ள பியூப்லோ ரிக்கோ மற்றும் சான்டா சிசிலியா கிராமங்களுக்கு இடையே சாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதாக ஆஸ்திரேலிய அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. மீட்பு படை உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மண்ணை தோண்டி எடுக்க தொடங்கினர்.

இதையும் படிங்க :திருமணத்திற்கு முந்தைய உடலுறவு, லிவிங் டுகெதரை சட்டவிரோதமாக்கிய அரசு.. எதிர்க்கும் இளைஞர்கள் !

உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், 70 க்கும் மேற்பட்ட தேடல்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் பல கருவிகளைப் பயன்படுத்தினர், 41 நபர்கள் சிக்கிருந்த நிலையில் , 24 மணி நேரத்திற்குப் பிறகு, 9 பேரை உயிருடன் மீட்டிள்ளனர். மேலும் 34 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 8 சிறுவர்களும் அடங்குவதாக தேசிய பேரிடர் இடர் முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஒரு ட்வீட்டில், ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ மண்சரிந்து மக்கள் உயிரிழந்த நிலைமையை குறித்து தனது வருத்தத்தை பதிவிட்டார்.பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசின் உதவிகள் கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

மலைப்பாங்கான புவியியல், அடிக்கடி கடுமையான மழைப்பொழிவு காரணமாக, கொலம்பியா அடிக்கடி நிலச்சரிவுகளை சந்திக்கிறது. எதிர்காலத்தில் நிலச்சரிவு தொடர்பான உயிரிழப்புகளைத் தடுக்க, காடுகளை மீண்டும் வளர்ப்பதில் நாடு கவனம் செலுத்தும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் சுசானா முஹமட் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, அதிக மழை தொடர்பான விபத்துகளால் 2022 இல் 216 பேர் இறந்துள்ளதாகவும் 538,000 மக்களை வீடற்றவர்களாக மாறியுள்ளனர்.

First published:

Tags: Columbia, Flood, Heavy Rainfall