உலகளவில் கொரோனா பரவல் தொடங்கி இரண்டு ஆண்டுகளை நெருங்கியுள்ள நிலையில், நியூசிலாந்து அருகேயுள்ள தீவு நாட்டில் தற்போது தான் முதல் முறையாக ஒரு நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூகான் பகுதியிலிருந்து தான் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தோன்றியதாக நம்பப்படுகிறது. அங்கிருக்கும் இறைச்சி மார்க்கெட்டில் இருந்து கொரோனா பரவியதாகவும், ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து செயற்கையாக இந்த வைரஸ் தோற்றுவிக்கப்பட்டதாகவும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. கொரோனா எங்கிருந்து பரவியது என ஆராய்ச்சிகளும், விசாரணைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இருப்பினும் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரியில் முதல் முறையாக கொரோனா ஒருவருக்கு பரவியது தெரிந்தது. இந்த நபரும் சீனாவில் இருந்து வந்தவர் தான். இப்படி கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகள் கொரோனா எனும் பெரும்தொற்றால் பாதிக்கப்பட்டு பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
Also read: திடீரென குறைந்த ட்விட்டர் ஃபாலோயர்ஸ்... குழம்பிய யூஸர்கள்.. காரணம் இதுதான்!
இந்நிலையில் நியூசிலாந்து அருகேயுள்ள குக் தீவுகளில் கொரோனா வைரஸால் தற்போது தான் முதல் முறையாக ஒரு நபர் பாதிக்கப்பட்டிருக்கிறார். நியூசிலாந்தின் அருகேயுள்ள 15 தீவுக்கூட்டத்தை அடக்கியது குக் தீவுகள். இது சுயமாக ஆளப்படும் தனி நாடு என்ற போதிலும் நியூசிலாந்தின் ஆதரவில் உள்ள ஒரு தேசம். இந்த சின்னஞ்சிறிய தீவில் மொத்தமே சுமாராக 18,000 பேர் தான் வசித்து வருகின்றனர். இந்த தீவின் மக்கள் தொகையில் 96% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். சுற்றுலாவை பெரிதும் நம்பியிருக்கும் இந்த தீவு, கொரோனா பரவலுக்கு பின்னர் தனது எல்லைகளை மூடிக்கொண்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டது.
Also read: சொந்த நாட்டு பிரதமரையே அசிங்கப்படுத்திய பாகிஸ்தான் தூதர் - இம்ரான் கானுக்கு தலைகுனிவு
இந்நிலையில் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தங்கள் குடிமக்களை மீட்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு விமானத்தில் தனது குடும்பத்தினருடன் திரும்பி தனிமைப்படுத்தலில் இருந்து வந்த 10 வயது சிறுவனுக்கு கடந்த வியாழனன்று (டிச 2) கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இதன் மூலம் இந்த சிறுவன் தான் கொரோனாவால் பாதிக்கப்படும் அந்த தீவைச் சேர்ந்த முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் தனிமைப்படுத்தல் அல்லாத பயணங்களை நியூசிலாந்துடன் தொடங்க இருந்த நிலையில் தீவில் ஒருவருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் மார்க் பிரவுன் அறிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, New Zealand