முகப்பு /செய்தி /உலகம் / 6 வயது துருக்கி சிறுமியின் உயிர்காத்த இந்திய மோப்ப நாய்கள் ரோமியோ, ஜூலி.. குவியும் பாராட்டு!

6 வயது துருக்கி சிறுமியின் உயிர்காத்த இந்திய மோப்ப நாய்கள் ரோமியோ, ஜூலி.. குவியும் பாராட்டு!

மீட்பு நாய்கள் ரோமியோ மற்றும் ஜூலி

மீட்பு நாய்கள் ரோமியோ மற்றும் ஜூலி

துருக்கி நிலநடுக்க மீட்பு பணிகளில், இடிபாடுகளில் சிக்கியிருந்த சிறுமியின் உயிரை காப்பாற்ற காரணமாக இருந்த இந்தியாவின் ரோமியோ - ஜூலி மோப்ப நாய்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaIstanbul Istanbul

துருக்கி மற்றும் சிரியா நாடுகளுக்கு இடையே மையமாக கொண்டு பிப்ரவரி 6ஆம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இரு நாடுகளையும் நிலைகுலைய வைத்துள்ளது. இந்த கொடூர நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40,000ஐ தாண்டியுள்ளது.

பேரிடரில் சிக்கித் தவிக்கும் துருக்கிக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மீட்பு குழுவை அனுப்பியுள்ளன. இந்தியாவில் இருந்து 6 விமானங்களில் மீட்புக்குழுவினர் மற்றும் மருந்துப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. துருக்கியில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளில், இந்தியா ‘ஆப்பரேஷன் தோஸ்த்’ நடவடிக்கை மூலம், மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அங்குள்ள ‘தேசிய பேரிடர் மீட்பு படையினர்’ 20க்கும் மேற்பட்டோரை உயிருடன் மீட்டுள்ளனர். 45க்கும் மேற்பட்ட சடலங்களை மீட்டுள்ளனர். அதேபோல துருக்கி நிலநடுக்க மீட்பு பணிகளில், இடிபாடுகளில் சிக்கியிருந்த சிறுமியின் உயிரை காப்பாற்ற காரணமாக இருந்த இந்தியாவின் ரோமியோ - ஜூலி மோப்ப நாய்கள் கவனம் ஈர்த்து வருகின்றன.

இதில் 6 வயது சிறுமியை உயிருடன் மீட்டதில் மோப்ப நாய்கள் ரோமியோ - ஜூலியின் பங்கு அபரிமிதமானது என்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பெருமிதம் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைபெற்ற மீட்பு பணி தோல்வி அடைந்தாலும், மோப்ப சக்தியின் மூலம் சிறுமியை ரோமியோ - ஜூலி நாய்கள் கண்டுபிடித்தது கவனம் பெற்று வருகிறது. 2015இல் நேபாள நாட்டில் நிகழ்ந்த பேரிடர் மீட்பு பணிக்கு இந்தியா தனது குழுவை அனுப்பிவைத்து. அதன் பின்னர் தற்போது தான் வெளிநாடு ஒன்றுக்கு மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு குழு சென்றுள்ளது.

First published:

Tags: Dog, Turkey, Turkey Earthquake