Home /News /international /

சிறப்பு சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார் நவாஸ் ஷெரிஃப்..!

சிறப்பு சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார் நவாஸ் ஷெரிஃப்..!

நவாஸ் ஷெரிஃப்

நவாஸ் ஷெரிஃப்

நவாஸின் உடல்நிலை கருதியே நீதிமன்றம் அவருக்கு எட்டு வார கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் மேல் சிகிச்சைக்காக லண்டன் செல்ல உள்ளதாகக் கூறப்படுகிறது.

நவாஸ் ஷெரிஃப்-ன் சிகிச்சைக்கான அவருடன் அவரது இளைய சகோதரர் ஷேபஸ் ஷெரிஃப் உடன் செல்வார் எனக் கூறப்படுகிறது. நவாஸின் உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருப்பதால் கடந்த இரண்டு வாரங்களாக பாகிஸ்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது லாகூர் ஜதி உம்ரா இல்லத்துக்கு நவாஸ் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

நவாஸின் ரத்தத்தில் ப்ளேட்லெட் எண்ணிக்கை குறைந்து வருவதாலே அவரின் உடல்நிலை நலிவடைந்து கொண்டே வருவதாகக் கூறப்படுகிறது. நவாஸின் ஒப்புதல் தற்போது கிடைத்துள்ளதால் அவர் விரைவில் லண்டனில் உள்ள ஹார்லி ஸ்ட்ரீட் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெறலாம் எனத் தெரிகிறது.

நவாஸின் உடல்நிலை கருதியே நீதிமன்றம் அவருக்கு எட்டு வார கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: மோசமான காலநிலையால் கடற்கரையில் தேங்கிய ’ஐஸ் முட்டைகள்’..!
Published by:Rahini M
First published:

Tags: Nawaz Sherif

அடுத்த செய்தி