மிகவும் மோசமான உடல்நிலையில் நவாஸ் ஷெரிஃப்..!

மருத்துவ சிகிச்சைக்காக நவாஸ் ஷெரிஃப்-க்கு எட்டு வார கால ஜாமின் அளிக்கப்பட்டுள்ளது.

மிகவும் மோசமான உடல்நிலையில் நவாஸ் ஷெரிஃப்..!
நவாஸ் ஷெரிஃப்
  • News18
  • Last Updated: November 3, 2019, 5:58 PM IST
  • Share this:
முன்னாளர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக அவரது மருத்துவர் தெரிவித்துள்ளார்.

நவாஸ் ஷெரிஃப்-ன் ப்ளேட்லெட்ஸ் எண்ணிக்கை மிகவும் குறைந்ததால் பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நவாஸின் மருத்துவர் அத்னன் கான் கூறுகையில், “முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெர்ஃபின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. அவருக்கு சிகிச்சை அளித்துவந்த மருத்துவக் குழு ஸ்டீராய்டு மருந்தை குறைத்தது. இதன் காரணமாக அவரது ப்ளேட்லெட் எண்ணிக்கை குறைந்துள்ளது.

தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிர் பிழைக்க மிகவும் போராடி வருகிறார் நவாஸ். அவரது உடல்நிலை சிறிய அளவில் சீரானாலும் கூட உடனடியாக அவரை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லலாம் என யோசித்து வருகிறோம்” என்றார்.


மருத்துவ சிகிச்சைக்காக நவாஸுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்லமாபாத் உயர் நீதிமன்றம் ஊழல் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து எட்டு வார கால ஜாமின் அளித்துள்ளது.

மேலும் பார்க்க: ’அசுரவேகத்தில் இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி’- பாராட்டிய ஜெர்மன் பிரதமர்

அல் பாக்தாதி கொலையா, தற்கொலயா?
First published: November 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்