கடல் பாதுகாப்பை அதிகரிக்கும் வண்ணம், இந்திய பெருங்கடலில் ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் நாடுகளின் கடற்படை கூட்டுப்பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதியில் அண்மைக்காலமாக சீனாவின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்திவரும் சீனா, கடற்பரப்பிலும் அதன் பலத்தை விரிவுபடுத்த தொடங்கியுள்ளது. அந்தவகையில் சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகளின் கடற்படை பாதுகாப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு மூன்று நாடுகள் இணைந்து தொடங்கிய இந்த கூட்டுப்பயிற்சி, மூன்றாவது ஆண்டாக இந்தமுறை நடைபெறுகிறது. இதில் ரஷ்யாவின் மூன்று பிரமாண்ட போர்க்கப்பல்களுடன், சீனாவின் இரண்டு கப்பல்களும், ஈரான் நாட்டின் 11 போர்க்கப்பல்களும் இணைந்துள்ளன. இவைதவிர ஈரானின் ஹெலிகாப்டர்களும் இந்த ஒத்திகையில் பங்கேற்றுள்ளன.
Also read: தந்தையின் சொத்தில் மகள்களுக்கு உரிமை - உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
இந்திய பெருங்கடலில் 10 ஆயிரத்து 600 மைல்களை உள்ளடக்கும் வகையில் கடற்படை பயிற்சி நடைபெறும் என்று மூன்று நாடுகளும் அறிவித்துள்ளன. இதில் நடுக்கடலில் வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கடற்கொள்ளையர்கள் மற்றும் பயங்கரவாதிகளிடம் இருந்து மக்களை மீட்கும் பணிகள் மற்றும் தீயணைப்புப் பயிற்சிகளிலும் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்கா உடனான மோதலுக்கு பிறகு ஈரான் நாடு, ரஷ்யா மற்றும் சீனாவுடன் கைகோர்த்து கடற்படை பயிற்சியில் ஈடுபட்டு வருவது சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதேபோல உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா உடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் ரஷ்யா, இந்திய பெருங்கடல் மட்டுமின்றி, அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களிலும் இந்த கடற்படை கூட்டுப்பயிற்சி தொடரும் என்று கூறியிருப்பது அமெரிக்காவை கலக்கமடையச் செய்துள்ளது.
Also read: ‘ஷிஃப்ட் முடிஞ்சு போச்சு, விமானத்தை ஓட்டமுடியாது..!’ அடம்பிடித்த விமானி - பயணிகள் கதறல்..இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.