Home /News /international /

ரஷ்ய எல்லையில் நிரந்தரமாக படைகளை நிறுத்த நேட்டோ நாடுகள் முடிவு...

ரஷ்ய எல்லையில் நிரந்தரமாக படைகளை நிறுத்த நேட்டோ நாடுகள் முடிவு...

நேட்டோ படைகள்

நேட்டோ படைகள்

எதிர்காலத்தில் ரஷ்யா மற்ற சில நாடுகள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக நேட்டோ அமைப்பு கணித்துள்ளது.

ரஷ்ய எல்லையில் படைகளை நிரந்தரமாக நிறுத்துவதற்கு நேட்டோ நாடுகள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பிலும் ஐரோப்பிய யூனியனிலும் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. நேட்டோ நாடுகளுடன் அண்டை நாடான உக்ரைன் சேரும்போது அது தங்கள் நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று ரஷ்யா தரப்பில் கருதப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த ஓராண்டாக எல்லையில் ரஷ்யா படைகளை குவித்தது. உலக நாடுகள் கணித்தபடி கடந்த பிப்ரவரி 24-ம்தேதி உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடுத்தது.

ஒன்றரை மாதங்களை கடந்து போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இந்த எண்ணிக்கை 40 லட்சத்தை தாண்டும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க - 2022 ஹஜ் பயணத்திற்கு 10 லட்சம் பேருக்கு அனுமதி - சவுதி அரசு அறிவிப்பு

இன்னொரு பக்கம் ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக அந்நாட்டின் மீது உலக நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவை அங்கம் வகிக்கும் நேட்டோ அமைப்பு அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்காலத்தில் ரஷ்யா மற்ற சில நாடுகள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக நேட்டோ அமைப்பு கணித்துள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் ரஷ்யா எல்லையில் படைகளை நிறுத்துவதற்கு நேட்டோ அமைப்பு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க - இலங்கை நெருக்கடிக்கு தீர்வு காணப்படவில்லை என்றால், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. எதிர்க்கட்சி எச்சரிக்கை!

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதின் மேற்கொண்ட நடவடிக்கைகள், நேட்டோ அமைப்புக்கு அதிருப்தியை அளித்துள்ளது. எதிர்காலத்தில் எந்த எல்லைக்கும் புதின் செல்வார் என்ற நேட்டோ விமர்சித்துள்ளது.

குறிப்பாக புதினின் நடவடிக்கைகள் ஐரோப்பாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று நேட்டோ கணித்துள்ளது. இதன் அடிப்படையில் ரஷ்யா எல்லையில் முன்னெச்சரிக்கையாக நேட்டோ படைகளை நிறுத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் வரும் ஜூன் மாதம் நேட்டோ நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் உக்ரைன் விவகாரம், ரஷ்யாவின் நடவடிக்கை உள்ளிட்டவை தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
Published by:Musthak
First published:

Tags: Russia - Ukraine

அடுத்த செய்தி