Home /News /international /

சூரியனை தொட்ட முதல் விண்கலம் - 5 லட்சம் கிமீ வேகத்தில் படைக்கப்பட்ட சாதனை

சூரியனை தொட்ட முதல் விண்கலம் - 5 லட்சம் கிமீ வேகத்தில் படைக்கப்பட்ட சாதனை

Parker solar probe

Parker solar probe

2018ம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்த இந்த விண்கலம், நொடிக்கு 100கிமீக்கு மேல், ஒரு மணிநேரத்துக்கு 5 லட்சம் கிமீ என்ற வேகத்தில் பயணித்து சூரியனை நெருங்கியிருக்கிறது.

    இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக விண்கலம் ஒன்று சூரியனை தொட்டு சாதனை படைத்துள்ளது. நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தால் அனுப்பி வைக்கப்பட்ட ‘ Parker Solar Probe ’ விண்கலம் தான் இந்த வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது.

    விண்வெளி, நிலவு, செவ்வாய் கிரகம் என வேற்று கிரகங்கள் குறித்த ஆராய்ச்சிகள் தற்போது பரினாம வளர்ச்சி பெற்று வருகின்றன. விண்வெளி ஆய்வில் முக்கிய கட்டத்தை மனித நாகரீகம் எட்டியிருக்கிறது. நம் சூரியக் குடும்பத்தின் அச்சாரமாக விளங்கி வரும் வெப்ப கிரகமான சூரியன் தான் பூமியில் உயிர்கள் வாழ காரணமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

    பூமியில் இருந்து 147.23 மில்லியன் கிமீ தொலைவில் இருக்கும் சூரியன் குறித்த ஆராய்ச்சிகளில் மனித சமூகமும் பின் தங்கியே இருந்து வருகிறது. தொலைநோக்கிகள் பயன்படுத்தியே இதுவரை சூரியன் குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பூமியை விட்டு வெகு தொலைவில் இருக்கும் சூரியன் 10 மில்லியன் டிகிரி வெப்பம் கொண்டதாக இருப்பதும் அதனை நெருங்குவதற்கு தடையாக இருந்தன.

    Also read:  கரப்பான் பூச்சி பீர் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதை தான் இந்த ஊரில் பலர் விரும்பி குடிக்கிறார்கள்!

    இந்நிலையில் சூரியன் குறித்த ஆராய்ச்சிப் பணிகளுக்காக நாசா அனுப்பி வைத்திருந்த ‘ Parker Solar Probe ’ விண்கலம் சூரியனின் மேல் பரப்பை எட்டி சாதனை படைத்திருக்கிறது. 2018ம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்த இந்த விண்கலம், நொடிக்கு 100கிமீக்கு மேல், ஒரு மணிநேரத்துக்கு 5 லட்சம் கிமீ என்ற வேகத்தில் பயணித்து சூரியனை நெருங்கியிருக்கிறது. சூரியனின் மேல்பரப்பான கொரோனா எனும் பகுதியில் நுழைந்து சுமார் 5 மணிநேரம் அங்கு ஆய்வு நடத்தியிருக்கிறது. இந்த விண்கலம் தனது 8வது முயற்சியில் தான் சூரியனின் மேல்பரப்பை எட்டியிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

    கடந்த ஏப்ரல் 28ம் தேதி Parker Solar Probe விண்கலம் சூரியனின் பரப்பை தொட்ட போதிலும், அதனுடைய தரவுகள் பூமியை எட்ட சில மாதங்கள் எடுத்துக் கொண்டதாலும், அந்த தரவுகளை ஆய்வுக்கு உட்படுத்தி முடிவுகளை அறிவிக்க மேலும் சில மாதங்களும் விஞ்ஞானிகளுக்கு தேவைப்பட்டுள்ளது. சூரியன் குறித்த ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்லாக இந்நிகழ்வு அமையும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். Parker Solar Probe விண்கலம் 2025ம் ஆண்டு வரை சூரியன் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் என நாசா தெரிவித்துள்ளது.
    Published by:Arun
    First published:

    Tags: NASA, Sun

    அடுத்த செய்தி