செவ்வாயில் தரையிறங்கியது உலகின் முதல் ரோபோ விண்கலம்

NASA’s InSight Lands on Mars to Peer Into Planet's Deep Interior | முதல் வேலையாக செவ்வாய் கிரகத்தின் தரையில் துளையிட்டு உட்புற வெப்பநிலை குறித்து இன்சைட் ஆய்வு செய்ய இருக்கிறது.

செவ்வாயில் தரையிறங்கியது உலகின் முதல் ரோபோ விண்கலம்
இன்சைட் விண்கலம்
  • News18
  • Last Updated: November 27, 2018, 9:42 AM IST
  • Share this:
செவ்வாய் கிரகத்தை ஆழமாக ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பியுள்ள இன்சைட் (InSight) விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது.

செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழுவதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில் கடந்த 2012-ம் ஆண்டு க்ரியூயாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், செவ்வாயின் உள்பகுதிகளை ஆழமாக ஆய்வு செய்வதற்காக இன்சைட் (InSight) விண்கலம் என்ற விண்கலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கலிஃபோர்னியா நகரிலிருந்து செலுத்தப்பட்டது. ‘இன்சைட்’ உலகின் முதல் ரோபோ விண்கலம் ஆகும்.


சுமார் 48 கோடி கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ள இந்த விண்கலம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை தரையிறங்கியது. முதல் வேலையாக செவ்வாய் கிரகத்தின் தரையில் துளையிட்டு உட்புற வெப்பநிலை குறித்து இன்சைட் ஆய்வு செய்கிறது. இதன்மூலம் செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியில் திரவங்கள் ஏதும் உள்ளதா அல்லது திடநிலையிலே உள்ளதா என தெரிய வரும் என நாசா தெரிவித்துள்ளது.

இன்சைட் விண்கலம் செவ்வாய்யில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ள 8-வது விண்கலமாகும். அனைத்தும் நாசாவால் அனுப்பபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வுகளை கொண்டு அடுத்து ஓராண்டுக்குள் செவ்வாய் கிரகத்துக்கு மனிதன் அனுப்பப்படுவான் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Also see..

First published: November 27, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்