சும்மாவே இருக்க ரூ.12 லட்சம் சம்பளம்...!

ஜெர்மன் மொழி பேசக்கூடிய 12 ஆண்கள், 12 பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்க உள்ளனர். 60 நாட்களுக்கு அவர்கள் படுத்த படுக்கையாவே இருக்க வேண்டும்.

news18
Updated: April 1, 2019, 8:07 PM IST
சும்மாவே இருக்க ரூ.12 லட்சம் சம்பளம்...!
நாசா
news18
Updated: April 1, 2019, 8:07 PM IST
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து ஒரு ஆய்வை நடத்த இருக்கிறது. ஆய்வு என்றால் பெரிய வேலை இல்லை... 60 நாட்கள் சும்மா படுத்தே இருக்க வேண்டும்.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவை இணைந்து, செயற்கை புவியீர்ப்பு விசை உள்ள இடத்தில் தூக்கம் வருவது பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன.

விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாத நிலையில், விண்வெளி வீரர்களுக்கு இது எந்த அளவு உதவும் என்று தெரிந்துள்வதற்காக இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளபடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேமாதிரி இன்னொரு வேலைவாய்ப்பு... சும்மா இருந்தா சம்பளம்... அதுவும் கிட்டத்தட்ட ரூ. 2 லட்சம்

இதற்கான ஜெர்மனியில் சும்மாவே இருக்கும் ஆய்வு நடத்தப்பட இருக்கிறது. ஜெர்மன் மொழி பேசக்கூடிய 12 ஆண்கள், 12 பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்க உள்ளனர். 60 நாட்களுக்கு அவர்கள் படுத்த படுக்கையாவே இருக்க வேண்டும்.

இதற்காக அவர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் 12 லட்சம் ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. உணவு, கழிப்பறை, ஓய்வு எல்லாமே படுக்கை நிலையில்தான்.

இவர்களில் ஒரு குழுவினர் புவி ஈர்ப்பு இல்லாத பகுதியில் தங்க வைக்கப்பட இருக்கின்றனர். 60 நாட்களுக்குப் பிறகு, இரு குழுக்களின் உடல் நிலை, மன நிலை ஆகியவை பரிசோதிக்கப்பட இருக்கின்றன.
Loading...
Also See...ஐபிஎல் தகவல்கள்:

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: March 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...