• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • Climate Change: 14 ஆண்டுகளில் பூமியின் வெப்பமயமாதல் விகிதம் இரு மடங்காக அதிகரிப்பு - நாசா ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

Climate Change: 14 ஆண்டுகளில் பூமியின் வெப்பமயமாதல் விகிதம் இரு மடங்காக அதிகரிப்பு - நாசா ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

Climate Change

Climate Change

முன்னணி ஆராய்ச்சியாளரான நார்மன் லோப், தற்போது எங்களது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ள தரவுகள் மிகவும் ஆபத்தானவை, இதுவரை இல்லாத அளவு பூமியின் வெப்ப விகிதம் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றம் குறித்து நாசா தலைமையிலான ஆராய்ச்சி குழு எச்சரித்துள்ளது. பூமியின் நிலம், கடல் மற்றும் வளிமண்டலத்தில் வெப்பத்தின் அளவு 14 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது தற்போதைய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் நாசா மற்றும் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (National Oceanic and Atmospheric Administration) விஞ்ஞானிகள், 2005 - 2019 வரையிலான வெறும் 14 ஆண்டுகளில் பூமியின் வெப்ப விகிதம் ஏறக்குறைய இரட்டிப்பாகியுள்ளதாக கண்டறிந்துள்ளனர். எதிர்வரும் ஆண்டுகளில் இந்த ஆற்றல் ஏற்றத்தாழ்வு இன்னும் அதிகரித்தல் அது மேலும் ஆபத்தான பல காலநிலை மாற்றங்கள் ஏற்பட வழிவகுக்கும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக நாசாவின் செய்தி குறிப்பில் தகவல் தெரிவித்துள்ள நாசாவின் CERES தலைமை ஆய்வாளர் மற்றும் ஆய்வின் முன்னணி ஆராய்ச்சியாளரான நார்மன் லோப், தற்போது எங்களது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ள தரவுகள் மிகவும் ஆபத்தானவை, இதுவரை இல்லாத அளவு பூமியின் வெப்ப விகிதம் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read:  கர்ப்பிணி ஆசிரியைக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச மெசேஜ் அனுப்பிய அரசுப்பள்ளி தலைமையாசிரியர்!

இது தொடர்பான ஆய்விற்காக விஞ்ஞானிகள் 2 சுயாதீன அளவீடுகளிலிருந்து (independent measurements) தரவை சேகரித்தனர். ஒன்று நாசாவின் மேகங்கள் மற்றும் பூமியின் கதிரியக்க ஆற்றல் அமைப்பு ஆகியவற்றில் செயற்கைக்கோள் சென்சார்களின் தொகுப்பு மற்றொன்று ஆர்கோ, உலகளாவிய பெருங்கடல்களின் வெப்பநிலை மற்றும் உப்புத்தன்மையை அளவிட மிதவைகளை வரிசைப்படுத்தும் ஒரு நடைமுறை.

பூமியில் காணப்படும் சுமார் 90% வெப்பம் கடல்களுக்கு செல்வதால், வெப்பநிலை விவரக்குறிப்பு முறை பற்றிய தீர்க்கமான தரவை கடல் வழங்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார் நார்மன் லோப். பூமியின் ஆற்றல் ஏற்றத்தாழ்வில்ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கண்டறிய மேற்காணும் இரு வழிகள் உண்மையிலேயே சீரான வழிகள் மேலும் இவை இரண்டும் பூவி வெப்பத்தில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய போக்கை காட்டுகின்றன. இதன் மூலம் நாங்கள் கண்டறிந்துள்ள தகவல்கள் நிகழ்காலத்துடன் தொடர்புடையது என்ற நம்பிக்கையை எங்களுக்கு நிறைய தருகிறது.

Also Read:  2020ல் அதிக அந்நிய நேரடி முதலீடு கிடைத்த நாடுகளில் இந்தியாவுக்கு 5வது இடம் - ஐ.நா தகவல்!

இந்த ஆய்வின்படி, மனித செயல்பாடுகளால் உற்பத்தி செய்யப்படும் பூமியின் வளிமண்டலத்தில் வெப்பத்தை தக்க வைக்கும் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் (greenhouse gases) அதிகரிப்பு காரணமாக heat அதிகரிப்பு ஏற்படுகிறது. கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் போன்ற கிரீன்ஹவுஸ் வாயுக்கள் சூரிய ஒளியை வளிமண்டலத்தின் வழியே செல்ல அனுமதிக்கின்றன. ஆனால் அதே சமயம் சூரிய ஒளி வளிமண்டலத்தை விட்டு வெளியேறுவதைத் தடுக்கின்றன.

கூடுதலாக பூமியின் வளிமண்டலத்தில் நீர் நீராவியின் (water vapour) அதிகரிப்பு சூரியனில் இருந்து வரும் வெப்பத்தை மீண்டும் வெளியே செல்ல விடாமல் அதிக அளவில் வளிமண்டலத்திலேயே தக்க வைக்கிறது. கடல்-பனி மற்றும் மேகங்கள் குறைவதும் சூரியனில் இருந்து வரும் ஆற்றலை அதிக அளவில் உறிஞ்ச வழிவகுக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ஆய்வு "நீண்டகால காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய ஒரு ஸ்னாப்ஷாட்" மட்டுமே என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். எவ்வாறாயினும் பூமியின் வெப்ப விகிதம் அதிகரிப்பது குறையவில்லை என்றால், இன்னும் பலப்பல காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதையே ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: