2021-ஆம் ஆண்டின் முதல் சூரிய உதயம்.. கண்கவர் புகைப்படத்தை வெளியிட்ட நாசா..
இந்த ஆண்டு தொடக்கம் கடந்த ஆண்டை போல் இல்லாமல் நல்ல உதயமாக இருக்க வேண்டும் என நாசா குறிப்பிட்டுள்ளது.

கண்கவர் புகைப்படத்தை வெளியிட்ட நாசா!
- News18 Tamil
- Last Updated: January 8, 2021, 12:21 PM IST
நாசா என்றழைக்கப்படும் நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் (National Aeronautics and Space Administration) சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டதன் மூலம் நெட்டிசன்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக 2021-ம் ஆண்டின் முதல் சூரிய உதயத்தின் கண்கவர் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. இந்த படம் சர்வதேச விண்வெளி நிலையத்தின் (International Space Station) நாசாவின் எக்ஸ்பெடிஷன் 56 குழு (NASA’s Expedition 56 crew) விண்வெளி வீரர்களில் ஒருவரால் எடுக்கப்பட்டது எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புகைப்படத்தை பகிர்ந்துகொண்ட நாசா கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளதாவது, "விண்கலத்தின் நிலைக்கு வடகிழக்கில் 1050 மைல் தொலைவில் இருக்கும் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பகுதியின் மீது படும் சூரியனின் பிரதிபலிப்பை அற்புதமாக விண்வெளி வீரர் எடுத்துள்ளார்" என்று விளக்கியுள்ளது. இப்பகுதி பெரும்பாலும் மேகங்களால் மூடப்பட்டிருக்கும். ஆனால் இந்த தனித்துவமான காட்சியைக் பிடித்த விண்வெளி வீரர் உண்மையில் ஒரு அதிர்ஷ்டசாலி. இந்த புகைப்படத்தில், கனேடிய மாகாணங்களில் உள்ள நியூஃபவுண்ட்லேண்ட் மற்றும் லாப்ரடரின் கடற்கரையை பகுதியும் கியூபெக்கை எனும் பகுதி காட்சியாளப்பதையும் காணலாம்.
சூரிய உதயத்தின் பார்வை பெரும்பாலும் ஒரு புதிய தொடக்கத்தின் புதிய உணர்வை நமக்கு தருகிறது. இந்த புகைப்படத்துடன், அந்த உணர்வு மிகவும் ஆழமாக இருக்கிறது. மேலும் நாசா தனது கேப்ஷனில் பதிவிட்டதாவது, ஒவ்வொரு சூரிய உதயமும் ஒரு புதிய நாளின் தொடக்கத்தை குறிக்கிறது. அதேபோல நாமும் ஒரு நல்ல அணுகுமுறை, பாசிட்டிவ் எண்ணங்கள் மற்றும் நன்றியுடன் புதிய நாளைத் தொடங்கலாம் என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. மேலும் இந்த ஆண்டு தொடக்கம் கடந்த ஆண்டை போல் இல்லாமல் நல்ல உதயமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
மேலும் தனது பதிவில், ஐகானிக் சிங்கரான நினா சிமோனின் ஃபீலிங் குட் பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளது. "Sun in the sky you know how I feel" என்ற வரிகள் பதிவில் இடம்பெற்றுள்ளன. நாசாவின் இந்த பதிவுக்கு பதிலளித்த ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (European Space Agency) அதேபாடலின் ஒரு வரியை குறிப்பிட்டுள்ளது. அதாவது, "Breeze driftin' on by you know how I feel.” என்ற வரிகளை வரிகளை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் அதற்கு பதிலளித்த நாசா "யூரோபியன் ஸ்பேஸ் ஏஜென்சி அதை சத்தமாக பாடுங்கள்!" என்று பதிவிட்டுள்ளது.
இந்த பதிவு இரண்டு நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டதிலிருந்து தற்போது வரை 1,033,766 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது. அற்புதமான புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் எந்தளவுக்கு பிரமிப்படைந்தார்கள் என்பதை விளக்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை கமெண்ட் செக்சனில் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக, சந்திர எக்ஸ்ரே ஆய்வகத்தால் (Chandra X-ray Observatory) எடுக்கப்பட்ட ஒரு படத்தை நாசா மிக சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் பூமியிலிருந்து 17,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு சுழல் நியூட்ரான் நட்சத்திரம், ஆற்றல் மிக்க துகள்களின் மேகத்தால் சூழப்பட்டிருந்ததை காண இரு கண்கள் போதாது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக 2021-ம் ஆண்டின் முதல் சூரிய உதயத்தின் கண்கவர் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. இந்த படம் சர்வதேச விண்வெளி நிலையத்தின் (International Space Station) நாசாவின் எக்ஸ்பெடிஷன் 56 குழு (NASA’s Expedition 56 crew) விண்வெளி வீரர்களில் ஒருவரால் எடுக்கப்பட்டது எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புகைப்படத்தை பகிர்ந்துகொண்ட நாசா கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளதாவது, "விண்கலத்தின் நிலைக்கு வடகிழக்கில் 1050 மைல் தொலைவில் இருக்கும் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பகுதியின் மீது படும் சூரியனின் பிரதிபலிப்பை அற்புதமாக விண்வெளி வீரர் எடுத்துள்ளார்" என்று விளக்கியுள்ளது.
சூரிய உதயத்தின் பார்வை பெரும்பாலும் ஒரு புதிய தொடக்கத்தின் புதிய உணர்வை நமக்கு தருகிறது. இந்த புகைப்படத்துடன், அந்த உணர்வு மிகவும் ஆழமாக இருக்கிறது. மேலும் நாசா தனது கேப்ஷனில் பதிவிட்டதாவது, ஒவ்வொரு சூரிய உதயமும் ஒரு புதிய நாளின் தொடக்கத்தை குறிக்கிறது. அதேபோல நாமும் ஒரு நல்ல அணுகுமுறை, பாசிட்டிவ் எண்ணங்கள் மற்றும் நன்றியுடன் புதிய நாளைத் தொடங்கலாம் என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. மேலும் இந்த ஆண்டு தொடக்கம் கடந்த ஆண்டை போல் இல்லாமல் நல்ல உதயமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
View this post on Instagram