சூரியக் குடும்பத்துக்கு அப்பால் 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் இன்னொரு பூமி?

விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டபோது GJ357 நட்சத்திரத்தை 3 கோள்கள் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: August 8, 2019, 10:33 AM IST
சூரியக் குடும்பத்துக்கு அப்பால் 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் இன்னொரு பூமி?
புதிய பூமி கண்டுபிடிப்பு
Web Desk | news18
Updated: August 8, 2019, 10:33 AM IST
சந்திரன், செவ்வாய் என்று பூமியைத் தாண்டிய மனிதனின் பயணங்கள் தொடங்கி விட்ட நிலையில், பிரபஞ்சத்தில் சூரியக் குடும்பத்திற்கு அப்பால் இருக்கும் புதிய கிரகங்களைக் கண்டறியும் முயற்சிகளிலும் அன்றாடம் புதிய புதிய தகவல்கள் கிடைத்து வருகின்றன.

பூமியில் இருந்து 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமியைப் போன்றதொரு கிரகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, விண்வெளியில் புதிய கோள்களை தேடுவதற்காக அனுப்பிய TESS எனப்படும் விண்வெளி தொலைநோக்கி  இந்த புதிய கிரகத்தை கண்டறிந்துள்ளது.

நட்சத்திரங்களை கிரகங்கள் கடந்து செல்லும்போது அவற்றின் பிரகாசமானது சற்று மங்கக்கூடும். அவ்வாறு நட்சத்திரங்களின் பிரகாசத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்து புதிய கிரகங்களை கண்டறியும் தொழில்நுட்பத்தின் மூலம் GJ357d என்ற இந்த கிரகத்தின் இருப்பு உலகுக்கு தெரியவந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் TESS தொலை நோக்கியில், GJ357 என்னும் நட்சத்திரத்தின் பிரகாசம் 3.9 நாட்களுக்கு ஒருமுறை சற்று குறைவது தெரியவந்தது. இதன் அடிப்படையில் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டபோது GJ357 நட்சத்திரத்தை 3 கோள்கள் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

நாசா


இதில் 3-வதாக இருக்கும் GJ357d என்னும் கிரகம் வசிக்கத் தகுந்ததாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. பூமியை விட 6.1 மடங்கு அதிக எடை கொண்ட இந்த கிரகம் 55.7 நாட்களுக்கு ஒருமுறை தனது நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. GJ357d கிரகத்தின் மேற்பரப்பில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்று சொல்லும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், தொடர்ந்த ஆராய்ச்சிகளின் மூலமே அதனை உறுதிப்படுத்த முடியும் என்கின்றனர்.

மேலும் படிக்க... அஜித் படம் பார்க்க லீவு கேட்ட மாணவன்.. கடுப்பான ஆசிரியர்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...