1976 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து பல்வேறு புதிய புதிய சாதனங்களை உருவாக்கி பல கண்டுபிடிப்புகளை நாசா கண்டறிந்து வருகிறது. அதன்படி நாசா செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய ரோவர் அங்கு வெற்றிகரமாக செயல்பட்டு மாதிரிகளை சேகரித்து வருகிறது. நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் முதல் மாதிரிகளை சேகரித்து சேமித்து வைத்துள்ளது.
பெர்செவரன்ஸ் ரோவர் மண் சேகரித்த போது ஏற்பட்ட துளைகள் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருக்கிறது. அந்தப் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் பல்வேறு அம்சங்களை கண்டறிய நாசா திட்டமிட்டடுள்ளது. நாசாவின் ஜெட் ப்ரொபல்ஷன் ஆய்வகத்தின் கூற்றுப்படி, நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பின் இரண்டு மாதிரிகளை டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 6 ஆம் தேதிகளில் சேகரித்துள்ளது. இந்த மாதிரிகளானது முந்தைய மாதிரிகள் போல் இல்லாமல், பாறை மையத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
புராதன நுண்ணுயிர் வாழ்வின் அறிகுறிகளை கண்டறிவதற்காக அந்த மாதிரிகள் பூமிக்கு கொண்டுவரப்பட உள்ளது. விஞ்ஞானிகள் இதை பூமியில் ஆய்வு செய்ய இருக்கின்றனர். தற்போது சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் பெரும்பாலான பகுதிகள் பாறைகளாக இருக்கும் என கூறப்படுகிறது. விண்வெளி வீரர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பும்போது எதிர்கொள்ள இருக்கும் சவால்களை அறிந்து கொள்ள இந்த மாதிரிகள் மீதான ஆய்வு உதவும் என கூறப்படுகிறது.
Read More : துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த பெண்… மடக்கிப் பிடித்த போலீசார்.. பரபரப்பு சம்பவம்
நாசா செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய பெர்சவரன்ஸ் ரோவர் துல்லியமாகவும் துடிப்பாகவும் செயல்பட்டு, செவ்வாய் கிரகத்தின் பல பகுதிகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டும் வருகிறது. செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கும், செவ்வாய் கிரகம் குறித்து அறிந்து கொள்வதற்கும் இது பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் நாசாவின் ரோவர் செவ்வாய் கிரகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று செவ்வாய கிரகத்தின் பல பகுதிகளை புகைப்படங்களாக அனுப்பி வருகிறது. பெர்சவரன்ஸ் ரோவரின் முன்பக்கத்தில் அபாயத் தடுப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.
இதன் மூலமாக ரோவர் பாதுகாப்பாக நகர்த்தப்பட்டு ஒவ்வொரு இடமாக ஆய்வு செய்து வருகிறது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெர்சவரன்ஸ் ரோவர் மூலம் செவ்வாய் கிரகத்தில் கிடந்த நூடுல்ஸ் போன்ற பொருள் புகைப்படமாக பதிவு செய்யப்பட்டது. இந்த படத்தை பகிர்ந்துள்ள நாசா, இந்த பொருளின் தன்மையை விஞ்ஞானிகளால் சரியாக கண்டறிய முடியவில்லை என தெரிவித்தது. முன்பு செவ்வாய் கிரகத்தில் காணப்பட்ட பொருட்களை போலவே இதுவும் ஏதாவது குப்பைத் துண்டுகளாக இருக்கலாம் என தகவல்கள் வெளியானது.
நாசா தனது மார்ஸ் சாம்சங் ரிட்டர்ன் புரோகிரமின் ஒரு பகுதியாக செவ்வாய் கிரகத்தில் ரோவர்கள் மூலம் சேகரிக்கப்பட்ட பாறைகள் மற்றும் தூசுகளை பூமிக்கு கொண்டு வர ஹெலிகாப்டர்களை அனுப்ப திட்டமிட்டிருக்கிறது. அதன்படி நாசா ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைந்து செவ்வாய் கிரக பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாசாவும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமும் இணைந்து செவ்வாய் கிரக பயண திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி அங்கு சேகரிக்கப்பட்டுள்ள மாதிரிகள் பூமிக்கு கொண்டு வரும் பட்சத்தில் செவ்வாய் கிரகம் குறித்த பல உண்மைகள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பதற்கான சாத்தியக் கூறுகளும் இதன்மூலம் தெரியவரும் எனவும் நம்பப்படுகிறது. பெர்செவரன்ஸ் ரோவர் விண்கலம் கொண்டு வரும் மாதிரிகளை ஆய்வு செய்த பிறகு செவ்வாய் கிரகம் குறித்த நாசாவின் ஆய்வு அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் என்றும் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: NASA