நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம்பிடித்த பிரபஞ்சத்தின் முதலாவது வண்ணப் புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டார். இந்த புகைப்படம் மூலம் விண்வெளியில் ஆயிரக்கணக்கான பால்வெளி மண்டலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. உலகின் முன்னணி விண்வெளி ஆய்வு மையமாக திகழ்வது அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம். விண்வெளியில் உள்ள இதுவரை அறிந்திடாத அதிசயங்களை கண்டறியும் பணியில் உலக நாடுகளுடன் இணைந்து நாசா ஈடுபட்டுவருகிறது.
பிரபஞ்சத்தின் புகைப்படம் வெளியிடு
இதன்படி, ஐரோப்பா மற்றும் கனடாவின் விண்வெளி ஆய்வு அமைப்புகளுடன் இணைந்து ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை அமெரிக்காவின் நாசா உருவாக்கியது. சுமார் 80,000 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி, பூமியிலிருந்து 10 லட்சம் மைல்கள் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அங்கிருந்து பிரபஞ்சத்தை படம்பிடித்து அனுப்பியுள்ளது. இதன் முதலாவது வண்ணப் புகைப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய நேரப்படி நேற்றிரவு வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மனித கண்களுக்குப் புலனாகாத பகுதிகளையும் கதிர்வீச்சு ஊடுருவல் முறையில் படம்பிடித்து தொலைநோக்கி அனுப்பியுள்ளது. இதன்மூலம், விண்வெளியில் ஆயிரக்கணக்கான பால்வெளி மண்டலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. பூமியில் இருந்து ஆயிரத்து 300 கோடி ஆண்டுகள் பயணம் செய்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாக நாசாவின் நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்துள்ளார்.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி
பிரபஞ்சத்தை மிகச்சிறந்த முறையில் மிகச்சிறந்த ரெசல்யூஷனில் பிடிக்கப்பட்ட படம் இதுவே என நாசா தெரிவித்துள்ளது. முதல்முறையாக மனிதனை நிலவுக்கு அனுப்பும் அமெரிக்காவின் அப்பல்லோ திட்டத்தை முன்னிற்று நடத்தியவர் ஜேம்ஸ் வெப். அவரின் பெயர் தான் இந்த தொலைநோக்கி திட்டத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி தென்னமெரிக்காவின் பிரெஞ்ச் கயனா பகுதியில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட இந்த தொலைநோக்கி, இந்த புகைப்படத்தை எடுத்து வெளியிடுவதற்கு ஆறு மாதம் தேவைப்பட்டுள்ளது. பிரசபஞ்சத்தின் இந்த காட்சியை படம் எடுக்க மட்டும் தொலைநோக்கிக்கு சுமார் ஒரு நாள் ஆனதாகவும், அதை பிராசஸ் செய்து முறையாக வெளியிட இத்தனை நாள்கள் ஆகியுள்ளது.
அமெரிக்க அதிபர் பாராட்டு
நாசாவின் இந்த சாதனை புகைப்படத்தை வெளியிட்ட ஜோ பைடன் விஞ்ஞானிகளை வெகுவாக பாராட்டியுள்ளார். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்றும், நமது பிரபஞ்சத்திற்கு புதிய வாசலாக இது அமைந்துள்ளது எனவும் கூறியுள்ளார். நமது கண்களுக்கு புலப்படாது இருந்து பால்வெளியை உலகின் மிகப்பெரிய, தலைச்சிறந்த தொலைநோக்கி படம்பிடித்து காட்டியுள்ளது என்றார்.
இதையும் படிங்க:
33 வயது இளைஞருக்கு மாதவிடாய்.. கருப்பை, கருமுட்டை இருந்ததால் அதிர்ச்சி.. சிறுநீர் கழிக்கும் போது கசிந்த ரத்தத்தால் வெளிவந்த உண்மை..
இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் செயல்பாட்டு காலம் 10 ஆண்டுகளாக திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளை, 20 ஆண்டுகள் செயல்படும் அளவிற்கு கூடுதலான எரிவாயு இந்த திட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ளதாக நாசா கூறியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.