• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • தங்கத்தால் ஆன ’கோல்டுமைன்’ சிறுகோளை ஆய்வு செய்யும் நாசா

தங்கத்தால் ஆன ’கோல்டுமைன்’ சிறுகோளை ஆய்வு செய்யும் நாசா

கோல்டுமைன் சிறுகோள்

கோல்டுமைன் சிறுகோள்

பூமியில் இருந்து 200 மில்லியன் தொலைவில் இருக்கும் கோல்டுமைன் எனும் தங்கம் நிறைந்திருக்கும் சிறுகோளை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா திட்டமிட்டுள்ளது.

  • Share this:
எண்ணிலடங்கா பல பொக்கிஷங்கள் நிறைந்திருக்கும் சூரியக்குடும்பத்தில் தங்கம், இரும்பு உள்ளிட்ட உலோகங்கள் நிறைந்திருக்கும் ’கோல்டுமைன் ஆஸ்டிராய்டு’ எனும் சிறுகோளும் உள்ளது. 1852 மார்ச் 17 ஆம் தேதி இந்த சிறுகோளை கண்டுபிடித்த இத்தாலிய வானியலாளர்கள், அதற்கு கிரேக்க கடவுளின் பெயரான ‘சைக்கி’ எனப் பெயரிட்டனர். 124 மைல் அகலமுள்ள இந்த சிறுகோள் பூமியில் இருந்து சுமார் 200 மில்லியன் மைல் தொலைவில் உள்ளது. கோல்டுமைன் ஆஸ்டிராய்டில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு மட்டும் சுமார் 10,000 குவாட்ரில்லியனுக்கு மேல் இருக்கும் என நாசா கணித்துள்ளது.

ஒரு குவாட்ரில்லியன் என்றால் 1 -ஐ தொடர்ந்து அதன் பின்னால் சேர்க்கப்படும் 15 பூஜ்ஜியங்களைத் சேர்த்தால் கிடைக்கும் ஒரு மாபெரும் தொகை. இதுவே தலையை கிறுகிறுக வைக்கும் நிலையில், 10,000 குவாட்ரில்லியன் என்றால் அதன் மதிப்பை நீங்களே கற்பனை செய்துகொள்ளுங்கள். நாசாவைப் பொறுத்தவரை இந்த சிறுகோளில் தங்கம் மட்டுமல்லாது இரும்பு உள்ளிட்ட உலோகங்களும் நிறைந்திருக்கும் என கணித்துள்ளது. அதன்படி, உலோகங்கள் நிறைந்திருக்கும் சிறுகோள்கள் கணக்கிடப்படும் வரிசையில் இந்தக் கோளை நாசா வகைப்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோல்டுமைன் சிறுகோளில் இருந்து எடுக்கப்படும் ஒரு சிறு துண்டு கூட பில்லியன் மற்றும் டிரில்லயன் மதிப்புடையதாக இருக்கும் என நாசா கருதுகிறது. தற்போது செவ்வாய் மற்றும் வியாழன் சுற்றுவட்டப் பாதைகளுக்கு இடையில் இருக்கும் புகழ்பெற்ற சிறுகோள்கள் பாதையில் கோல்டுமைன் ஆஸ்டிராய்டு இருப்பதை உறுதி செய்துள்ள நாசா, இந்தக் கோளை ஆய்வு செய்ய ‘சைக்கி 16’ என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்குள் அந்த கோளின் தோற்றத்தைக் கண்டுபிடிக்கவும் நாசா ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர். சூரிய மண்டலத்தை உருவாக்கும்போது ஏற்பட்ட மோதலில் உலோகங்கள் நிறைந்த கிரகம் ஒன்றில் இருந்து சைக்கி சிறுகோள் பிரிந்து வந்திருக்கலாம் என கருதும் ஆய்வாளர்கள், அதன் வெப்பநிலையை கண்டறியும் முயற்சியில் முதல் கட்டமாக இறங்கியுள்ளனர். இரும்பு மற்றும் நிக்கலால் கோல்டுமைன் ஆஸ்டிராய்டு ஆனதாக இருக்கலாம் என்றும் நாசா நம்புகிறது.

இந்த திட்டத்துக்கு இந்தியாவைச் சேர்ந்த கல்யாணி சுகத்மே மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மும்பையில் பிறந்து வளர்ந்த அவர், அங்கு இயற்பியல் மற்றும் பொறியலில் இளங்கலை பட்டத்தை நிறைவு செய்தார். பின்னர், அமெரிக்கா சென்ற அவர் நாசாவில் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் பணியாற்றி வருகிறார். சைக்கி சிறுகோளை ஆய்வு செய்ய மல்டிஸ்பெக்ட்ரல் இமேஜர், காமா-ரே மற்றும் நியூட்ரான் ஸ்பெக்ட்ரோமீட்டர், மேக்னெட்டோமீட்டர் மற்றும் ரேடியோ இன்ஸ்ட்ருமென்ட் ஆகிய கருவிகளை நாசா பயன்படுத்தி வருகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: