அமேசான் காடுகளைவிட அதிகமாக பற்றி எரியும் ஆப்பிரிக்க மழைக் காடுகள்! நாசா வெளியிட்ட புகைப்படம்

தற்போது நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் அமேசான் காடுகளின் தீயை அணைப்பதற்கு 18 மில்லியன் அமெரிக்கா டாலர் வழங்குதற்கு முடிவு செய்யப்பட்டது.

news18
Updated: August 27, 2019, 6:22 PM IST
அமேசான் காடுகளைவிட அதிகமாக பற்றி எரியும் ஆப்பிரிக்க மழைக் காடுகள்! நாசா வெளியிட்ட புகைப்படம்
நாசா வெளியிட்ட புகைப்படம்
news18
Updated: August 27, 2019, 6:22 PM IST
பிரேசிலின் அமேசான் காடுகளைவிட அதிகமாக மத்திய ஆப்பிரிக்கப் பகுதியிலுள்ள காடுகள் தீப்பற்றி எரிகின்றன என்று நாசாவின் தீ குறித்த தகவல்களுக்கான லேலாண்மை அமைப்பின் புகைப்படத்தில் தெரிவந்துள்ளது.

உலகத்தின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகள் கடந்த சில வாரங்களாக தீப் பற்றி எரிந்துவருகின்றன. இந்த விவகாரம் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது. மக்களை பெரும் கவலையிலும் ஆழ்த்தியது.

இந்த விவகாரத்தை பிரேசில் பெரிய அளவில் கவனத்தில் கொள்ளாத நிலையில் உலக நாடுகள் கொடுத்த அழுத்தத்தைத் தொடர்ந்து தற்போது தீயை அணைப்பதற்கான முயற்சியை பிரேசில் மேற்கொண்டுள்ளது. தற்போது நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் அமேசான் காடுகளின் தீயை அணைப்பதற்கு 18 மில்லியன் அமெரிக்கா டாலர் வழங்குதற்கு முடிவு செய்யப்பட்டது.


Read: அமேசான் காடுகள் ஏன் முக்கியம்.. அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்...!

ஆனால், அந்த உதவியை பிரசில் மறுத்துவிட்டது. இந்தநிலையில், நாசா தீ குறித்த தகவல்களுக்கான மேலாண்மை அமைப்பு வெளியிட்டுள்ள புகைப்படம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதில், அமேசான் காடுகளைவிட மத்திய ஆப்பிரிக்க பகுதியிலுள்ள காடுகள் தீப் பற்றி எரிந்துவருகிறது. காங்கோ, காபான், கேமெருன் உள்ளிட்ட மத்திய ஆப்பிரிக்க நாடுகளின் எல்லைக்குள் வரும் 3.3 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவு கொண்ட மழைக் காடுகள் தீப்பற்றி எரிந்துவருகிறது.

Loading...

Also see:

First published: August 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...