நாசாவின் இன்சைட் லேண்டர், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை தாக்கும் ஒரு விண்கல்லின் ஒலியை கண்டுபிடித்துள்ளது. செவ்வாய் கிரகத்தை தாக்கும் நில அதிர்வு மற்றும் ஒலி அலைகளை கண்டுபிடிப்பது இதுவே முதல் முறை.
செவ்வாய் கிரகத்திற்கு நாசா தனது இன்சைட் லேண்டரை 2018- ஆம் ஆண்டு அனுப்பியது. 2021- ஆம் ஆண்டு செப்டம்பர் 5- ஆம் தேதி செவ்வாயின் மேற்பரப்பை இன்சைட் லேண்டர் அடைந்தது. அப்போது 3 பகுதிகளாக வெடித்து சிதறிய இன்சைட் லண்டர், செவ்வாய் கிரகத்தில் 3 பள்ளங்களை ஏற்படுத்தியது.
ஆராய்ச்சியாளர்கள் பள்ளம் இருப்பிடங்களை உறுதிப்படுத்த நாசாவின் செவ்வாய் உளவு ஆர்பிட்டரின் கண்காணிப்புகளை பயன்படுத்தினர். இந்நிலையில்
செவ்வாய் கிரகத்தின் விண்கல் தாக்கம் குறித்த பதிவையும் நாசா வெளியிட்டுள்ளது. அந்த தாக்கத்தின் போது தனித்துவமான மூன்று "புளூப்" ஒலிகள் பதிவாகியுள்ளன.
My surroundings are peaceful and tranquil, allowing me to pick up vibrations from deep inside Mars. But in a first, I’ve also captured seismic waves from a more dramatic source: several meteoroids impacting miles away.
Read more: https://t.co/6JNaUasx9F
🎧 Hear for yourself: pic.twitter.com/XpGOsyPINi
— NASA InSight (@NASAInSight) September 19, 2022
இந்த விசித்திரமான ஒலி, வளிமண்டல விளைவால் ஏற்படுகிறது, இது பூமியில் உள்ள பாலைவனங்களிலும் கேட்கும் ஒலி என நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். செவ்வாய் கிரகத்தை தாக்கும் நில அதிர்வு மற்றும் ஒலி அலைகளை கண்டுபிடிப்பது இதுவே முதல் முறை.
செவ்வாய் கிரகத்தில் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்படுவதாக இன்சைட்டின் நில அதிர்வு அளவீட்டு கருவி கண்டுபிடித்துள்ளது. இதுவரை அங்கு 1,300க்கும் மேற்பட்ட அதிர்வுகளை இன்சைட் கண்டறிந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.