செவ்வாயில் பறந்த நாசாவின் குட்டி ஹெலிகாப்டர்.. மனிதகுலத்தின் புதிய சாதனை

செவ்வாயில் பறந்த நாசாவின் ஹெலிகாப்டர்

வெற்றிகரமாக ஹெலிகாப்டர் 30 விநாடிகள் வரை பறந்ததை நாசா விஞ்ஞானிகள் உற்சாகமாக கொண்டாடினர்.

 • Share this:
  அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கிய குட்டி ரக ஹெலிகாப்டரை வெற்றிகரமாக பறக்க வைத்து அரிய சாதனை படைத்துள்ளது.

  இதுவரை மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு கருவி, பூமியைத் தாண்டி வேற்று கிரகத்தில் பறந்ததில்லை என்ற நிலையை மாற்றி நாசா வரலாறு படைத்துள்ளது. விடாமுயற்சி என்று பொருள்படும் பெர்சிவரன்ஸ் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்தில் கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் நாசா தரையிறக்கியது. அதில் உள்ள ஒரு கிலோ 800 கிராம் எடையுள்ள இன்ஜெனியூட்டி என்ற குட்டி ஹெலிகாப்டர் கடந்த ஜூலை மாதம் விண்கலத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டது.

   

      

   

      

   

  இந்நிலையில் பூமியில் இருந்து ஜாய்ஸ்டிக் உதவியுடன் செவ்வாய் கிரகத்தில் உள்ள இன்ஜெனியுட்டி ஹெலிகாப்டர் பூமியின் நேரப்படி நேற்று இயக்கப்பட்டது. வெற்றிகரமாக ஹெலிகாப்டர் 30 விநாடிகள் வரை பறந்ததை நாசா விஞ்ஞானிகள் உற்சாகமாக கொண்டாடினர்.
  Published by:Sankaravadivoo G
  First published: