ஹோம் /நியூஸ் /உலகம் /

அமெரிக்காவின் புளோரிடாவை புரட்டிப்போட்ட 'இயான்' புயல்... நாசா வெளியிட்ட பகீர் காட்சிகள்!

அமெரிக்காவின் புளோரிடாவை புரட்டிப்போட்ட 'இயான்' புயல்... நாசா வெளியிட்ட பகீர் காட்சிகள்!

புளோரிடா இயான் புயலின் திக் திக் நிமிடங்கள்

புளோரிடா இயான் புயலின் திக் திக் நிமிடங்கள்

புளோரிடாவில் ஏற்பட்ட இயான் புயல் தாக்கத்தை நாசா விண்வெளியிலிருந்து எடுத்த புகைப்படம் மற்றும் காணொளியை வெளியிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • international, IndiaFloridaFlorida

  புளோரிடாவை புரட்டிப்போட்ட பலத்த இயான் புயல் உருவாக்கிய தருணத்தை நாசா விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட திகிலூட்டும் காணொளியை வெளியிட்டுள்ளது.

  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைக் கடந்த புதன்கிழமை தாக்கிய இயான் புயல் அமெரிக்காவை உருக்குலைத்த மிக அழிவுகளுமான புயலின் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இயான் புயல் அந்த அளவில் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியதுடன் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  பல பேரின் வீடுகள் புயலில் தூக்கி வீசப்பட்டது. 2.6 மில்லியன் வீடுகள் மற்றும் தொழில் செய்யும் பகுதிகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கினர். பல பேர் உடைமைகள் இழந்து வீடுகளை இழந்து நகரங்களை விட்டு வெளியேறியனர். அமெரிக்காவில் இந்த ஆண்டு ஏற்பட்ட மிக பெரிய இயற்கைபேரிடரான இது கருதப்படுகிறது.
   
  View this post on Instagram

   

  A post shared by NASA (@nasa)  பூமியில் இயான் புயல் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவுகளை இணையத்தில் காணொளியாகவும் புகைப்படங்களாகவும் பரவி வந்தது. தற்போது அதனை விண்வெளியிலிருந்து காணும் வகையில் நாசா இயான் புயலின் காணொளியை வெளியிட்டுள்ளது.

  Also Read : வீடுகளை சூழ்ந்த வெள்ளம்.. வீதிகளில் சுற்றும் சுறாக்கள்... புளோரிடாவை புரட்டி போட்ட புயல்

  சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து செப்டம்பர் 28 ஆம் தேதி இயான் புயல் 415 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருந்த நிலையில் அதனை நாசா காட்சிப்படுத்தியுள்ளது. பகிரப்பட்ட ஒரு நாளில் அந்த காணொளி சமூக வலைத்தளத்தில் 8.7 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றது. மேலும் இது பெரிய அளவில் இணையத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்குக் காரணம் இயற்கை எப்போதும் அழகாக இருக்காது என்பது தான் என்று பலரும் கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர்.

  Published by:Janvi
  First published:

  Tags: Cyclone, Florida, NASA