முகப்பு /செய்தி /உலகம் / வியாழன் கோளின் துல்லிய புகைப்படம்... ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் பதிவான அற்புத காட்சி

வியாழன் கோளின் துல்லிய புகைப்படம்... ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் பதிவான அற்புத காட்சி

வியாழன் கோளின் துல்லிய புகைப்படம்

வியாழன் கோளின் துல்லிய புகைப்படம்

சூரியக் குடும்பத்தில் பெரிய கோளான வியாழன் கோளின் மிகத் துல்லிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • international, IndiaAmericaAmericaAmerica

உலகில் மிகப் பெரிய மற்றும் துல்லியமான தொலைநோக்கி கருவியில் பதிவாகியுள்ளது வியாழன் கோளின் பிரம்மாண்டமான காட்சி. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி கருவி எடுத்த இந்த புகைப்படம், பார்த்து அசர்ந்து நிற்கும் அளவு துல்லியமாகப் பதிவாகியுள்ளது.

அதில் வியாழனைச் சுற்றியுள்ள அரோராக்கள், ராட்சத புயல்கள், நிலவுகள் மற்றும் வளையங்கள் ஆகியவை மிகத் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. இந்த புகைப்படத்தைப் பார்த்த ஆராய்ச்சியாளர்களே வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி கருவியை உருவாக்க அமெரிக்கா டாலர் படி 10 பில்லியின் செலவழிக்கப்பட்டுள்ளது.  இதனைச் சர்வதேச திட்டமாக நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் கனடா விண்வெளி நிறுவனம் இணைத்து சாத்தியப்படுத்தியுள்ளனர்.

தொலைநோக்கியிலிருந்து பல படங்களின் கலவையிலிருந்து உருவாக்கப்பட்ட வியாழனின் தனித்துவ படத்தில், வெளிப்புறத்தில் தெரியும் அரோராக்கள் வியாழனின் வடக்கு மற்றும் தெற்கு துருவங்களுக்கு மேல் உயரமான பகுதிகளுக்கு விரிவடைந்து இருப்பதாக நாசா கூறியுள்ளது. அரோராஸ் என்பது சூரியனால் ஏற்படும் ஒளி காட்சிகள் ஆகும்.

Also Read : இம்ரான் கானுக்கு ஆதரவாக திரண்ட ஆதரவாளர்கள் - இஸ்லாமாபாத்-ஐ கைப்பற்றுவோம் என முழக்கம்!

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி கருவியைக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாசா அமைத்தது. தற்போது இது பூமியிலிருந்து ஒரு மில்லியன் மைல் தூரத்தில் நிலைகொண்டுள்ளது. தற்போது, இந்த தொலைநோக்கி வெளியிட்டுள்ள  வியாழனின் துல்லிய புகைப்படத்தைப் பற்றி ஆராய்ச்சி குழுவில் ஒருவரான கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிரக வானியலாளர் இம்கே டி பேட்டர் கூறுகையில் வியாழன் கிரகத்தை இப்படிப் பார்த்ததே இல்லை என்றும் இது நம்பமுடியாத அளவு உள்ளது என்றும் கூறினார். மேலும்,  புகைப்படம் இந்த அளவு தெளிவாக வரும் என்பதை நாங்களே எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

top videos

    இன்னும் 20 ஆண்டுகளுக்கு ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி கருவி மூலம் பல வானிலை ஆராய்ச்சிகள்  மேற்கொள்ளபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    First published:

    Tags: NASA, Space