இந்தியாவின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது - ‘மிஷன் சக்தி’-க்கு நாசா கண்டனம்!

இந்தியா நடத்திய ‘மிஷன் சக்தி’ ஆப்பரேஷன் மூலம் விண்வெளியில் ஏற்பட்ட குப்பைக்குக் கண்டங்கள் அதிகரித்து வருகின்றன.

Web Desk | news18
Updated: April 2, 2019, 6:41 PM IST
இந்தியாவின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது - ‘மிஷன் சக்தி’-க்கு நாசா கண்டனம்!
சர்வதேச விண்வெளி நிலையம்
Web Desk | news18
Updated: April 2, 2019, 6:41 PM IST
இந்தியாவின் ‘மிஷன் சக்தி’ சோதனை விண்வெளியில் ஏற்படுத்தியுள்ள குப்பைத் துகள்களால் விண்வெளி வீரர்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நாசா குற்றம் சுமத்தியுள்ளது.

”இந்தியாவின் ASAT ’ஒரு கொடுமையான விஷயம்’. 400 குப்பைத் துகள்கள் விண்வெளியில் நிறைந்துள்ளது. இது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்குத் தான் இடையூறு” என நாசா தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.

உலகின் சூப்பர் ’ஸ்பேஸ் பவர்’ நாடுகளுள் ஒன்றாக ‘மிஷன் சக்தி’ மூலம் உயர்ந்துள்ளதாக இந்தியா கடந்த சில நாள்களுக்கு முன்னர் அறிவித்தது. இதுகுறித்து அமெரிக்காவின் நாசா தலைவர் தனது ஊழியர்கள் உடனான ஒரு சந்திப்பில் பேசினார்.


படிக்க... ‘மிஷன் சக்தி’ என்றால் என்ன?

அவர் பேசுகையில், “பல துகள்களும் கண்டறியும் வகையில் பெரிய அளவில் இல்லை. தற்போதைய சூழலில் 10 செ.மீ மற்றும் அதற்கு மேற்பட்ட அளவிலான துகள்களை மட்டும் ஆராய்ந்து வருகிறோம். இதுபோன்ற அளவிலேயே சுமார் 60 துகள்களைக் கண்டறிந்துள்ளோம்.

குறைந்த வட்டத்தில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், 24 துகள்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தைத் தாண்டிச் சென்றுள்ளது. இது மிக மிகக் கொடுமையன விஷயம். இந்தியாவின் இச்செயலை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

Loading...

படிக்க.... சும்மாவே இருக்க ரூ.12 லட்சம் சம்பளம்...!

இது நமக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது என்பதை நாசா அறிந்துகொண்டுள்ளது. அமெரிக்க ராணுவமும் 10 செ.மீ.-க்கும் அதிகப்படியான அளவில் உள்ள 23,000 குப்பைத் துகள்களைக் கண்டறிந்துள்ளது. இது விண்கலங்களுக்கும் விண்வெளி நிலையத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்” எனக் குற்றம் சுமத்தினார்.

மேலும் பார்க்க: பி.எஸ்.எல்.வி சி-45 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட எமிசாட் சாட்டிலைட்டால் என்ன பயன்?


ஐ.பி.எல் தகவல்கள்...!

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:
First published: April 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...