ஹோம் /நியூஸ் /உலகம் /

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் நாசாவுக்கு தொடரும் பின்னடைவு? ஆர்டெமிஸ்-1 திட்டம் 3வது முறையாக தள்ளி வைப்பு

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் நாசாவுக்கு தொடரும் பின்னடைவு? ஆர்டெமிஸ்-1 திட்டம் 3வது முறையாக தள்ளி வைப்பு

ஆர்டெமிஸ்-1

ஆர்டெமிஸ்-1

ஆர்டெமிஸ்-1 திட்டம் தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வருவது நாசாவுக்கு சற்று பின்னடைவாக உள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நிலவை ஆய்வு செய்வதற்காக ராக்கெட் அனுப்பும் நாசாவின் திட்டம் மூன்றாவது முறையாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

  50 ஆண்டுகளுக்கு முன்பு 1972 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்வெளிக்கு முதல்முறையாக மனிதர்களை அனுப்பி அவர்களை நிலவின் மேற்பரப்பில் நடக்கச் செய்து  உலகையே பிரமிப்பிற்குள்ளாக்கியது. அதன் பிறகு கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்யும் ஆர்டெமிஸ் திட்டத்தை தற்போது தொடங்கியுள்ளது நாசா.

  முதற்கட்டமாக ஆர்டெமிஸ்-1 எனும் ஆளில்லா ராக்கெட் ஏவும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது நாசா. ஆர்டெமிஸ்-2 திட்டத்தில் விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டு உள்ளது. விண்ணில் அனுப்பப்படும் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் உதவியுடன், அதனுடன் இணைக்கப்பட்ட ஆரியன் என்ற விண்கலம் நிலவின் மேற்பரப்பில் இருந்து 60 மைல் தொலைவில் இறங்கி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.

  இந்த ஆர்டெமிஸ்-1 நாற்பத்தியிரண்டு நாட்களில் சுமார் 1.3 மில்லியன் மைல்கள் பயணிக்கும். இதன் பயண திட்டத்தின் படி கடந்த ஆகஸ்டு 29-ந்தேதி இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் ஆர்டெமிஸ் ரக்கெட்டை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த விண்கலம் புறப்படுவதற்கான கவுன்ட்-டவுன் தொடங்கப்பட்டது. ஆனால், சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதன் காரணமாக 40-வது நிமிடத்தின்போது கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டது. எரிபொருள் கசிவு போன்ற காரணங்களால் ராக்கெட் செலுத்தும் திட்டம் தள்ளி போனது.

  இதையும் படிங்க: நீங்க சரியில்லை' கனடா பிரதமரை திட்டிய சீன அதிபர்.. வீடியோ லீக் ஆனதால் பரபரப்பு!

  இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு ஆர்டெமிஸ்-1 ராக்கெட் மீண்டும் செப்டம்பர் 3-ந்தேதி விண்ணில் ஏவப்படும் என கூறப்பட்டது. எனினும், இந்த முறையும் எரிபொருள் கசிவால் திட்டம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. அடுத்ததாக அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சக்தி வாய்ந்த இயான் புயல் தாக்கியதால் ராக்கெட் பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

  இதனை தொடர்ந்து, நவம்பர் 14-ந்தேதி அதிகாலை 12.07 மணியளவில் ராக்கெட்டை செலுத்தவும், அதனை லைவ் நிகழ்ச்சியாக நாசா வலைதளத்தில் வெளியிடவும் நாசா அமைப்பு முடிவு செய்திருந்தது. கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையம் அருகே நிகோல் சூறாவளி தாக்குதலுக்கான எச்சரிக்கை விடப்பட்டதால் நிலவு ஆய்வு ராக்கெட் பயணம் மீண்டும் தள்ளிப்போனது. இதையடுத்து இன்று ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என நாசா அறிவித்திருந்தது. ஆனால் இந்த முறையும் எரிபொருள் கசிவால் 3-வது முறையாக ராக்கெட் ஏவும் பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

  ராக்கெட்டுக்குள் மீண்டும் எரிபொருளை செலுத்தி, வெளியேற விடாமல் பாதுகாப்புடன் வைக்க முடியும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தற்போது கசிவை சரி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தொழில்நுட்பக் கோளாறு மற்றும் இயற்கை சீற்றம் ஆகியவற்றால் நாசாவின் ஆர்டெமிஸ்-1 திட்டம் தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. அடுத்து ராக்கெட் எப்பொது ஏவப்படும் என்ற விபரம் பின்னர் வெளியிடப்படும் எனவும் நாசா அறிவித்துள்ளது

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Florida, Moon, NASA