• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • வர்த்தகம், கடல்சார் பாதுகாப்புக்கு எதிரான தடைகளை நீக்க வேண்டும் - ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

வர்த்தகம், கடல்சார் பாதுகாப்புக்கு எதிரான தடைகளை நீக்க வேண்டும் - ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

சட்டப்படியான கடல்சார் வர்த்தகத்துக்கு உள்ள தடைகளை நீக்க வேண்டும். இதன் வாயிலாக உலகளாவிய பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

  • Share this:
    கடல்சார் பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்திற்கு எதிராக உள்ள தடைகளை நீக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் நடந்த பொது விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக இந்தியா நியமிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்துக்கு கவுன்சிலுக்கு தலைமை வகிக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. கவுன்சிலில் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பொது விவாதம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையேற்றார். இந்தியப் பிரதமர் ஒருவர், கவுன்சிலின் கூட்டத்தை தலைமையேற்று உரையாற்றுவது இதுவே முதல் முறை ஆகும்.

    வீடியோ கான்பரன்ஸ் முறையில் நடந்த இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “கடல்சார் பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்தில் அனைத்து நாடுகளும் ஒத்துழைத்து செயல்பட வேண்டும். இதற்காக ஐந்து அம்சங்களை பின்பற்றலாம். இதன் அடிப்படையில் விரிவான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். கடல்சார் ஒத்துழைப்பில் உள்ள பிரச்னைகள், பயங்கரவாதத்துக்கும், கடற்கொள்ளையர்களுக்கும் உதவுவதாக அமைந்துள்ளது.

    முதலாவதாக, சட்டப்படியான கடல்சார் வர்த்தகத்துக்கு உள்ள தடைகளை நீக்க வேண்டும். இதன் வாயிலாக உலகளாவிய பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

    இரண்டாவது, தற்போது உள்ள கடல்சார் உரிமை தொடர்பான பிரச்னைகளுக்கு சுமுகமான முறையில் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு தீர்வு காணப்பட வேண்டும். பரஸ்பரம் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை இது ஏற்படுத்தும். சர்வதேச அளவில் இணைந்து செயல்பட இது வழி வகுக்கும்.

    மூன்றாவதாக, இயற்கை சீற்றம் மற்றும் கடல் பிராந்தியத்துக்கு உள்ள ஆபத்துகளுக்கு எதிராக அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

    Must Read : முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு

    நான்காவது, கடல்கள் மாசுபடுவதை தடுப்பதில் அனைவரும் பொறுப்பு ஏற்று செயல்பட வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஐந்தாவதாக, கடல்சார் ஆதாரங்களை பயன்படுத்துவதில் அனைவருக்கும் பொறுப்புணர்வு தேவை. சில நாடுகள் மட்டுமே அதிகளவில் மீன் பிடிக்கும் நடைமுறையை தவிர்க்க வேண்டும்.” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: