எனது நண்பர், ஜென்டில் மேன்...! - மோடியை புகழ்ந்த டிரம்ப்

எனது நண்பர், ஜென்டில் மேன்...! - மோடியை புகழ்ந்த டிரம்ப்
டிரம்ப்
  • Share this:
இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை குஜராத்தில் சுமார் 70 லட்சம் பேர் திரண்டு வரவேற்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் முதல்முறையாக இந்தியா வருகிறார். இம்மாதம் 24, 25-ம் தேதிகளில் குஜராத், டெல்லியில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்தியா வரும் அதிபர் டிரம்பையும் அவரது மனைவியையும் வரவேற்கும் விதத்தில் வெளியுறவு அமைச்சக டிவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவுகளை வெளியிட வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும், டிரம்பை வரவேற்று பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.


டிரம்பை வரவேற்க தாங்கள் பயன்படுத்தும் மொழியை குறிப்பிட வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. டிரம்பின் குஜராத் பயணத்தின்போது அகமதாபாத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமரக்கூடிய வகையில் சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட கிரிக்கெட் மைதானத்தை பிரதமர் மோடியுடன் சேர்ந்து டிரம்ப் திறந்து வைக்கவுள்ளார். உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக இது திகழும்

இதன்பின்னர் மைதானத்தில் நடைபெறவுள்ள how are you trump என்ற பொருள் கொண்ட கெம் ச்சோ டிரம்ப் கூட்டத்தில், டிரம்ப் பங்கேற்கிறார். ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியை போன்று பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் மோடியுடன் சேர்ந்து டிரம்ப் உரை நிகழ்த்துவார் என கூறப்படுகிறது.

பின்னர் சபர்மதி நதி முகத்துவாரத்தில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் ஆகியோர் இடையே பேச்சுவார்த்தை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அமெரிக்காவிடம் இருந்து 14 , 239 கோடி ரூபாய் மதிப்பில் நாசாம்ஸ் வான்பாதுகாப்பு சாதனத்தை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம், 18 ,510 கோடி ரூபாய் மதிப்பில் கடற்படை ஹெலிகாப்டர் வாங்குவது தொடர்பான ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கையெழுத்திடும் என கூறப்படுகிறது.இந்திய சுற்றுப்பயணம் குறித்து ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், மோடியை தனது நண்பர் என்றும், சிறந்த நற்பண்புகளை கொண்ட நல்ல மனிதர் என்றும் பாராட்டினார். மோடியுடன் வார இறுதியில் தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது விமான நிலையத்தில் இருந்து மைதானம் வரையிலும் 50 லட்சம் பேர் முதல் 70 லட்சம் பேர் வரை வரவேற்பு அளிப்பார்கள் என மோடி கூறியதாகவும் டிரம்ப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ஒப்பந்தம் சரியான முறையில் உருவாக்கப்படும் பட்சத்தில், அதை அமெரிக்கா நிச்சயம் ஒப்புக்கொள்ளும் என்றும் டிரம்ப் கூறினார்.
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading