முதலைக்கண்ணீர் வடிக்கும் தமிழக அரசியல் தலைவர்கள்.. ராஜபக்ச மகன் விமர்சனம்

நாமல் ராஜபக்ச

திருமாவளவன், எங்களுடன் சிநேகமாக கலந்துரையாடி அனைத்தையும் அறிந்து கொண்டார். அத்தகையவர் இன்று சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது அதிர்ச்சியாக உள்ளது என்று நாமல் தெரிவித்துள்ளார்

 • Share this:
  தமிழக அரசியல் தலைவர்கள் ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பது போல் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் என்று இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச மகன் நாமல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

  இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் மஹிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்பய ராஜபக்ச வெற்றி பெற்றார். அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சவிற்கு சிங்கள மக்கள் ஆதராகவும் தமிழ் மக்கள் எதிராகவும் வாக்களித்து இருந்தனர்.

  இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ச நேற்று பதவியேற்றார். இவரின் வெற்றிக்கு தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் எதிர் கருத்தை பதிவிட்டு இருந்தனர். இந்நிலையில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச மகனும் எம்.பியுமான நாமல் தமிழக அரசியல் தலைவர்களை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  அதில், தமிழக அரசியல் தலைவர்கள் சந்தர்ப்பவாத அரசியலை தக்கவைத்து கொள்ள ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பது போல் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர். 2009ல் யுத்தம் முடிந்ததும், திமுக.,வின் பாராளுமன்ற குழுவினர் இலங்கை வந்து, ராஜபக்சேவுடன் சிநேகமாக பழகினர்.  அதிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எங்களுடன் சிநேகமாக கலந்துரையாடி அனைத்தையும் அறிந்து கொண்டார். அத்தகையவர் இன்று சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது அதிர்ச்சியாக உள்ளது“ என்றுள்ளார்.   
  Published by:Vijay R
  First published: