சீனாவில் இருந்து வந்துள்ள மர்ம விதைகள் - அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை

சீனாவில் இருந்து அனுப்பப்பட்டுள்ள விதைகள் குறித்து அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் இருந்து வந்துள்ள மர்ம விதைகள் - அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை
விதை பாக்கெட்டுகள்
  • News18
  • Last Updated: July 30, 2020, 8:20 PM IST
  • Share this:
உலகையே தற்போது ஆட்டம் காண வைத்துள்ள கொரோனா வைரஸ், கடந்தாண்டு இறுதியில் சீனாவின் வூஹானில் உள்ள மார்கெட்டில் இருந்து மனிதர்களுக்கு பரவியது. சீனாவில் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷியா என பல நாடுகள் தற்போது வரை கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன.

வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம் என அமெரிக்கா நேரடியாக குற்றம் சுமத்தியுள்ளதுடன், அமெரிக்காவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க சீனா எடுத்துள்ள ஆயுதம் என்றும் கூறிவருகிறது.

இந்த சர்ச்சை மற்றும் பரபரப்புகளுக்கிடையே, தற்போது அமெரிக்காவில் உள்ள ஒரு சிலருக்கு சீனாவிலிருந்து மர்மமான விதைகள் பார்சலில் வந்திருப்பதாகவும் அந்த விதைகள் குறித்து அமெரிக்க விவசாயத்துறை சந்தேகம் அடைந்து இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.


சீனாவிலிருந்து பார்சலில் மர்மமான விதைகள் வந்தால் அந்த விதைகளை யாரும் பயிரிட வேண்டாம் என்றும் அந்த விதைகள் மற்றும் அதன் பேக்கேஜ்களை பத்திரமாக வைத்திருந்து உள்ளூரில் உள்ள விவசாயத்துறை அதிகாரிகளிடம் அதை காண்பிக்க வேண்டும் என்றும் அந்நாட்டு வேளாண் துறை குறிப்பிட்டுள்ளது.
படிக்க: முழு ஊரடங்கு நீட்டிப்பு - எவற்றுக்கெல்லாம் தடை தொடர்கிறது...?படிக்க: கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் அமெரிக்காவில் படுகொலை - கணவன் வெறிச்செயல்


படிக்க: ’ஆண் குழந்தையுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளோம்’ ஹர்திக் பாண்டியாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்
ஆனால் இது குறித்து மறுப்பு தெரிவித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகமானது, பாக்கெட்டின் லேபிள்கள் போலியானவை என்றும், தவறான தகவல்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்த பார்சலை சீனாவுக்கு திருப்பித் அனுப்புமாறு சீனா, அமெரிக்காவின் அஞ்சல் சேவையை கேட்டுள்ளோம். அப்போது தான் அதுகுறித்து சீனா விசாரிக்க முடியும் என வெளியுறவு செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.
First published: July 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading