மியான்மரின் பெரும் தலைவர், ‘பெண் சிங்கம்’ ஆங் சான் சூகி சிறைபிடிப்பு- ராணுவப்புரட்சி அச்சம்

மியான்மரின் பெரும் தலைவர்,  ‘பெண் சிங்கம்’ ஆங் சான் சூகி சிறைபிடிப்பு- ராணுவப்புரட்சி அச்சம்

மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி.

நோபல் அமைதி பரிசு வென்ற சூகிக்கு வயது 75 ஆகிறது. ஜனநாயகத்துக்காக போராடும் மிகப்பெரிய தலைவராகவும் பெண் சிங்கம் என்றும் உலக அரங்கில் பெயர் பெற்றவர் சூகி.

  • Share this:
மியான்மரின் பெரும்தலைவர், பெண் சிங்கம் என்று அழைக்கப்படும் ஆங் சான் சூகி சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு ராணுவப் புரட்சி பீதி ஏற்பட்டுள்ளது.

கடந்த 1962 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. இதை எதிர்த்து தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகி சுதந்திர போராட்டத்தை வழிநடத்தினார். சுமார் 21 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

கடந்த 2015-ல் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில்ஆங் சான் சூகியின் கட்சி அமோக வெற்றி பெற்றது. அவரின் மகன்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருப்பதால் அவரால் அதிபர் பதவியேற்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து சூகிக்கு நெருக்கமான டின் கியாவ் (71) அதிபர் பதவியேற்றார். நாட்டின் தலைமை ஆலோசகராக ஆங் சாங் சூச்சி பொறுப்பேற்றார்.

ராக்கைன் மாநிலத்தில் ராணுவத் தளபதிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் 7.40 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். சூச்சிக்கு இருந்த ஜனநாயகப் பிம்பமானது இந்த நடவடிக்கைகளை அவர் வெளிப்படையாக ஆதரித்ததன் மூலம் சிதைந்துபோனது.

இந்தநிலையில் கரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்தது.

இந்தநிலையில் ஆங் சான் சூகி ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மியான்மரில் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்கள் ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குடிமை அரசுக்கும் ராணுவத்துக்கும் சில மாதங்களாகவே அங்கு பதற்றமான உறவு நிலை நீடித்திருந்தது. இந்நிலையில் தேர்தலை மோசடி என்று அந்நாட்டு ராணுவம் விமர்சித்தது. யாங்கூன் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

நோபல் அமைதி பரிசு வென்ற சூகிக்கு வயது 75 ஆகிறது. ஜனநாயகத்துக்காக போராடும் மிகப்பெரிய தலைவராகவும் பெண் சிங்கம் என்றும் உலக அரங்கில் பெயர் பெற்றவர் சூகி.
Published by:Muthukumar
First published: