மலேசியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற 93 ரோஹிங்கியா அகதிகள் கைது

மேற்கு ரக்ஹைன் மாநிலத்தில் அமைந்துள்ள முகாம்களில் இருந்து தப்பிய இந்த ரோஹிங்கியாக்கள், கடல் வழியாக மலேசியாவை அடையும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

news18
Updated: December 2, 2018, 5:01 PM IST
மலேசியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற 93 ரோஹிங்கியா அகதிகள் கைது
ரோஹிங்கியா அகதிகள் (கோப்புப் படம்)
news18
Updated: December 2, 2018, 5:01 PM IST
மியான்மரிலிருந்து மலேசியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற 93 ரோஹிங்கியா அகதிகளை மியான்மர் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

மேற்கு ரக்ஹைன் மாநிலத்தில் அமைந்துள்ள முகாம்களில் இருந்து தப்பிய ரோஹிங்கியா மக்கள், கடல் வழியாக மலேசியாவை அடையும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

இதுகுறித்து மியான்மரின் தென் கடலோர பகுதியின் அரசு இயக்குனர் மோ ஜா லட் கூறுகையில், ‘முகாம்களிலிருந்து தப்பி வந்த அவர்கள் மலேசியாவுக்கு செல்லும் நோக்கத்தில் வந்துள்ளனர்’ என்றார். அவர்களை மீண்டும் முகாம்களுக்கே அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேபோல், கடந்த நவம்பர் 16-ல் மியான்மரின் வர்த்தக மையமாக அறியப்படும் யாங்கோன் அருகே படகு ஒன்றிலிருந்த 106 ரோஹிங்கியாக்கள் கைது செய்யப்பட்டனர். மலேசியா செல்ல முயன்ற அவர்கள், படகு என்ஜின் பழுதான நிலையில் மியான்மர் அதிகாரிகளிடம் சிக்கியிருந்தனர். இத்துடன், தெற்கு ரக்ஹைன் கடல் பகுதியிலிருந்து மலேசியா செல்ல முயற்சித்த 80 ரோஹிங்கியா அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

மியான்மர் கடல் பகுதியில் மழையின்றி அமைதியான வானிலை காணப்படுவதால், இவ்வாறான படகு வழிப்பயணங்கள் மீண்டும் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. அந்த வகையில், சமீப வாரங்களில் படகு வழியாக மலேசியாவில் தஞ்சமடையும் 3 முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 2017-இல் மியான்மரில் ஏற்பட்ட தொடர் வன்முறைகள் மற்றும் ராணுவத்தின் தேடுதல் வேட்டை காரணமாக 8 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்திருக்கின்றனர். இதேபோல், முந்தைய வன்முறைகளில் வெளியேறிய 40,000-க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் இந்தியாவில் அகதிகளாக வசித்து வருகின்றனர்.

Also watch
Loading...
First published: December 2, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...