Home /News /international /

மியான்மரில் ராணுவத்துக்கு எதிராக செயல்பட்டதாக ஆங் சான் சூச்சிக்கு 4 ஆண்டுகள் சிறை!

மியான்மரில் ராணுவத்துக்கு எதிராக செயல்பட்டதாக ஆங் சான் சூச்சிக்கு 4 ஆண்டுகள் சிறை!

ஆங் சான் சூச்சி ராணுவத்துக்கு எதிராக போராடியதற்காக 2 ஆண்டுகளும், இயற்கை பேரிடர் சட்டத்தை மீறியதற்கு இரண்டு ஆண்டுகளும் என மொத்தம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    மியான்மரில் ராணுவத்துக்கு எதிராக கலவரத்தை தூண்டுவதாக தொடரப்பட்ட வழக்கில், NLD கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    2011ம் ஆண்டு வரை பர்மா என்று அழைக்கப்பட்டு வந்த மியான்மரில், கடந்தாண்டு இரண்டாவது முறையாக பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆன் சான் சூச்சியின் என்.எல்.டி கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சியமைத்தது. இந்த சூழலில் நாடாளுமன்றம் கூடும் முன்பு, ஆட்சியை இந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் ராணுவம் கைப்பற்றியது.

    2020ல் நடந்த பொதுத் தேர்தலில் மோசடியாக ஆங்சான் சூச்சி கட்சி வெற்றி பெற்றதாகவும், பண மோசடி நடத்தியதாகவும் ராணுவம் குற்றம்சாட்டியது. இதன் காரணமாக ஆங்சான் சூச்சி உள்ளிட்ட ஆளுங்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.

    இந்த சூழலில் ராணுவத்துக்கு எதிராக கலவரத்தை தூண்டுவதாகவும், போராட்டம் நடத்த அக்கட்சியினருக்கு அழைப்பு விடுத்ததால் மியான்மரின் பொது சுகாதார விதியை ஆங்சான் சூச்சி மீறியதாகவும் ராணுவம் வழக்குத் தொடர்ந்தது.

    Also read: இந்தியாவில் குளிர்காலம் கடுமையாக இருக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை!

    இந்த வழக்கை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம், ராணுவத்துக்கு எதிராக போராடியதற்காக 2 ஆண்டுகளும், இயற்கை பேரிடர் சட்டத்தை மீறியதற்கு இரண்டு ஆண்டுகளும் என மொத்தம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Myanmar

    அடுத்த செய்தி