முகப்பு /செய்தி /உலகம் / ’ரோஹிங்கியா மக்களை இனப்படுகொலை செய்யும் நோக்கமில்லை’- ஐநா-வில் ஆங் சாங் சூகி

’ரோஹிங்கியா மக்களை இனப்படுகொலை செய்யும் நோக்கமில்லை’- ஐநா-வில் ஆங் சாங் சூகி

ஆங் சாங் சூகி

ஆங் சாங் சூகி

’2017-ல் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா போராளிகள் தாக்கியதற்கு எதிர்ப்பாகத்தான் மியான்மர் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது’.

  • Last Updated :

ஐநா-வின் நீதிமன்றத்தில் ‘ரோஹிங்கியா மக்களை இனப்படுகொலை செய்யும் நோக்கமில்லை' என அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மியான்மரின் ஆங் சாங் சூகி விளக்கம் அளித்துள்ளார்.

ஐநா-வில் பேசியுள்ள ஆங் சாங் சூகி, “மியான்மர் ராணுவம் சமம் அற்ற முறையில் நடந்திருக்கலாம். ஆனால், ரோஹிங்கிய சிறுபான்மை மக்களை ஒட்டுமொத்தமாக அழிக்கும் நோக்கம் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு ரோஹிங்கியா மக்கள் மீது மியான்மர் ராணுவம் கொடூரமானத் தாக்குதலை நடத்தியது.

இதனால் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியாக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். இக்குற்றச்சாட்டை முன்வைத்து ஆப்ரிக்க கண்டத்தின் காம்பியா என்னும் நாடு ஐநா-வில் மியான்மர் மீது வழக்கு தொடர்ந்தது.

இதற்கு விளக்கமளிக்கவே இன்று ஐநா நீதிமன்றத்துக்கு ஆங் சாங் சூகி வந்துள்ளார். “மியான்மரின் ராக்கின் மாநிலத்தில் நிலவும் சூழலைத் தெரிந்து கொள்ளாமல் தவறான ஒரு வழக்கை காம்பியா எடுத்து வந்துள்ளது. 2017-ல் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா போராளிகள் தாக்கியதற்கு எதிர்ப்பாகத்தான் மியான்மர் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது” எனப் பதிலளித்துள்ளார்.

மேலும் பார்க்க: ரோஹிங்கியா குழந்தைகளுக்கு மறுக்கப்படும் கல்வி... மனித உரிமை கண்காணிப்பகம் கண்டனம்!

top videos

    First published:

    Tags: Myanmar