இலங்கை வடக்கு மாகாண ஆளுநராகிறார் முத்தையா முரளிதரன்!

தற்போதைய இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதை வெளிப்படையாக ஆதரித்தவர்.

இலங்கை வடக்கு மாகாண ஆளுநராகிறார் முத்தையா முரளிதரன்!
முத்தையா முரளிதரன்
  • News18
  • Last Updated: November 27, 2019, 5:37 PM IST
  • Share this:
இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநராக முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படுகிறார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த வீரராக அறியப்பட்ட சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இலங்கை அணியைக் கடந்து உலக அளவில் மிகச் சிறந்த பந்து வீச்சாளராக அறியப்பட்டவர் முத்தையா முரளிதரன்.

இந்தியத் தமிழரான அவர் இலங்கையின் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆனால், சிங்களப் பேரினவாதத்துக்கு நேரடியாக ஆதரவு அளித்ததாக தமிழ் மக்கள் சார்பாக அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. தற்போதைய இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதை வெளிப்படையாக ஆதரித்தவர். 2009-ம் ஆண்டு இலங்கையில் இறுதிக்கட்டப் போர் நடந்தபோது ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.


உலக அரங்கில் ராஜபக்ச சகோதர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தபோது, முரளிதரன் அவர்களுக்கு ஆதரவாக இருந்தார். இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ச பொறுப்பேறவுடனேயே இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்குமாகாணப் பகுதிக்கு முத்தையா முரளிதரன் ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியானது.

முத்தையா முரளிதரன் ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு தமிழர்கள் பகுதியில் எதிர்ப்புகள் எழுந்திருந்தது. இந்தநிலையில், வடக்கு மாகணப் பகுதிக்கு ஆளுநராவதற்கு முத்தையா முரளிதரனுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்ச அழைப்புவிடுத்துள்ளார். அதனையடுத்து, வடக்கு மாகணப் பகுதிக்கு முத்தையா முரளிதரன் ஆளுநராவது உறுதியாகியுள்ளது.

Also see:

 
First published: November 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்