Home /News /international /

இந்து ஜனநாயகத்தில் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுகின்றனர் - அல் குவைதா தலைவர் அல் ஜவாஹிரி சாடல்

இந்து ஜனநாயகத்தில் முஸ்லிம்கள் ஒடுக்கப்படுகின்றனர் - அல் குவைதா தலைவர் அல் ஜவாஹிரி சாடல்

அல்குவைதா தலைவர் ஜவாஹிரி

அல்குவைதா தலைவர் ஜவாஹிரி

அல் கொய்தாவின் தலைவரான அய்மன் அல்-ஜவாஹிரி, கர்நாடகாவில் நிலவும் ஹிஜாப் சர்ச்சையை மையமாக வைத்து ஒரு புதிய வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார், இதில் "இந்து இந்தியாவின் உண்மை நிலையையும் அதன் ஜனநாயகத்தின் வஞ்சகத்தையும்" அம்பலப்படுத்தியதாக அவர் கோரியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    அல் கொய்தாவின் தலைவரான அய்மன் அல்-ஜவாஹிரி, கர்நாடகாவில் நிலவும் ஹிஜாப் சர்ச்சையை மையமாக வைத்து ஒரு புதிய வீடியோ செய்தியை வெளியிட்டுள்ளார், இதில் "இந்து இந்தியாவின் உண்மை நிலையையும் அதன் ஜனநாயகத்தின் வஞ்சகத்தையும்" அம்பலப்படுத்தியதாக அவர் கோரியுள்ளார். கடந்த செப்டம்பரில் இருந்து உலகின் மிகவும் தேடப்படும் ஜிஹாதியின் முதல் அறிக்கையான இந்த வீடியோ, செவ்வாய் இரவு பிற்பகுதியில் அல் கொய்தா ஆன்லைன் குழுக்களில் வெளியிடப்பட்டது.

    இந்த எட்டு நிமிட அறிக்கையில், அல்-ஜவாஹிரி கர்நாடகா ஹிஜாப் விவகாரத்தில் பிரபலமான கர்நாடகா மாணவி, அல்லாஹூ அக்பர் என்று முழங்கிய முஸ்கன் கானைப் ராட்டியுள்ளார் அல் குவைதா தலைவர். மேலும் இந்து பல தெய்வ வழிபாட்டாளர்கள் அடங்கிய கும்பலின் மிரட்டலுக்கு அடிபணியாமல் கடவுள் மிகப்பெரியவர் என்ற இஸ்லாமிய முழக்கத்தை வெளியிட்ட முஸ்கன் கானின் தைரியத்தைப் பாராட்டினார் ஜவாஹிரி.

    பாழாய்ப்போன மேற்கத்திய உலகில் தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்ட சகோதரிகளுக்கு தார்மீக பாடத்தைக் காட்டியதற்காக அல்லாஹ் அவளுக்கு வெகுமதி அளிக்கட்டும், என்று இந்த வீடியோவில் ஹிஜாப் புகழ் முஸ்கன் கானை அவர் பாராட்டினார்.

    அல்-ஜவாஹிரியின் கடைசி வீடியோ, செப்டம்பர், 2021 இல் வெளியிடப்பட்டது, அவர் இறந்துவிட்டார் என்ற வதந்திகளின் பின்னணியில் வந்தது, மேலும் ஆப்கானிஸ்தானின் வீழ்ச்சிக்கு முந்தைய மாதம் நடந்த தலிபான்களைக் குறிப்பிடவில்லை. தலிபானின் வெற்றியை அல் கொய்தா ஜிஹாதி இயக்கத்தின் "மிகப்பெரிய வெற்றி" என்று பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

    அவர் மேலும் அந்த வீடியோவில் இந்து ஜனநாயகத்தின் ஏமாற்று வேலைக்கு மயங்கி விடாதீர்கள். இந்துத்துவா முஸ்லிம்களை ஒடுக்கும் ஒரு உபகரணமேயன்றி வேறில்லை என்றார். நிர்வாணத்தை அனுமதிக்கும் அதே வேளையில் ஹிஜாபை தடை செய்தபோது பிரான்ஸ், ஹாலந்து மற்றும் சுவிட்சர்லாந்தின் உண்மை தன்மையை அம்பலப்படுத்தியது. அதே ஏமாற்று கருவிதான் இந்த இந்துத்துவவாதமும் என்று அவர் அந்த வீடியோவில் சாடியுள்ளார்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Hijab, Karnataka

    அடுத்த செய்தி