உலகெங்கிலும், இஸ்லாமியர்கள் வன்முறையால் குறிவைக்கப்படுகிறார்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். இஸ்லாமியர்கள், அவர்கள் வாழும் சமூகத்தில் சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டாலும், ஒவ்வொரு நாளும் அமெரிக்காவை பலப்படுத்த தவறுவதில்லை என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் ரம்ஸான் கொண்டாட்ட வரவேற்பில், சர்வதேச மத சுதந்திரத்திற்கான தூதராக முதன் முதலாக ஒரு இஸ்லாமியரை நியமித்துள்ளதாக ஜோ பைடன் கூறினார்.
‘இந்நிகழ்வு மிகவும் முக்கியமானது, ஏனென்றால் இன்று, உலகம் முழுவதும், பல இஸ்லாமியர்கள் வன்முறையால் குறிவைக்கப்படுவதை நாங்கள் காண்கிறோம். யாரும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டவோ அல்லது அவர்களின் மத நம்பிக்கைகளுக்காக ஒடுக்கப்படவோ கூடாது,’ என்று அவர் வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில் தெரிவித்தார்.
இதையும் படிங்க | பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால ‘தவறான’ ஆட்சி ‘ஒரு ஆய்வு கட்டுரை’: ராகுல் காட்டம்
‘இன்று, உய்குர்கள் மற்றும் ரோஹிங்கியாக்கள் மட்டுமின்றி பஞ்சம், வன்முறை, மோதல்கள் மற்றும் நோய்களை எதிர்கொள்பவர்கள் உட்பட இந்த புனித நாளை கொண்டாட முடியாத அனைவரையும் நாங்கள் நினைவுகூருகிறோம். மேலும், போர் நிறுத்தம் உட்பட நாம் பார்க்க விரும்பும் உலகை நோக்கிய நம்பிக்கை மற்றும் முன்னேற்றத்தின் அறிகுறிகளை மதிக்கவும், ஏமனில் உள்ள மக்களை கடந்த 6 ஆண்டுகளில் முதல் முறையாக ரம்ஸானை அமைதி முறையில் கொண்டாடவும் அனுமதித்தது’ என்று அமெரிக்க அதிபர் கூறினார்.
‘ஆனால், அதே நேரத்தில், வெளிநாட்டிலும் சரி, நம் நாட்டிலும் சரி, ஏராளமான பணிகள் செய்யப்பட உள்ளன என்பதை நாம் இந்த நேரத்தில் ஒப்புக்கொள்ள வேண்டும். இஸ்லாமியர்கள் நமது சமூகத்தில் வன்முறை மற்றும் இஸ்லாமோஃபோபியா உட்பட பல சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டாலும், அவர்கள் ஒவ்வொரு நாளும் நமது தேசத்தை வலிமையாக்குகிறார்கள்,’ என்றும் அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, அமெரிக்காவை மிகவும் சமமானதாகவும், முஸ்லீம் அமெரிக்கர்களை உள்ளடக்கியதாகவும் மாற்றுவது மிகவும் சரியான தொழில் கட்டமைப்பை உருவாக்குவதற்கான நீடித்த வேலையின் இன்றியமையாத பகுதியாகும் என்று கூறினார். ‘உலகத்தில் உள்ள அனைத்து வரலாற்றிலும் ஒரு மதம், இனம், புவியியல் அடிப்படையில் மட்டுமல்ல அல்ல, மாறாக ஒரு ஒற்றுமை அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரே தேசம் நாங்கள்தான்,’ என்று பெருமிதம் தெரிவித்தார்.
நிகழ்வுக்குப் பிறகு ட்விட்டரில் அதிபர் பைடன் கூறுகையில், ‘இன்று இரவு வெள்ளை மாளிகையில் ஈத் அல்-பித்ர் (ரம்ஸான்) வரவேற்பை நடத்துவதில் ஜில் மற்றும் நான் பெருமைப்படுகிறோம். மேலும், உலகம் முழுவதும் இப்புனித பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் எங்கள் அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று தெரிவித்தார். இதற்கிடையே, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸும் இந்நிகழ்ச்சியில் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Eid Mubarak, Joe biden, Ramzan