ஹோம் /நியூஸ் /உலகம் /

எகிப்தில் தங்க நாக்கு கொண்ட மம்மிகள் கண்டுபிடிப்பு

எகிப்தில் தங்க நாக்கு கொண்ட மம்மிகள் கண்டுபிடிப்பு

மம்மி - தங்க நாக்கு

மம்மி - தங்க நாக்கு

அதேபோல் எகிப்தில் 2,000 ஆண்டுகள் பழமையான இடத்தில் தோண்டியபோது நாக்கு வடிவ ஆபரணத்துடன் கூடிய மண்டை ஓட்டைக் கண்டுபிடித்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

எகிப்தில் குவெஸ்னா கல்லறையில் தொல்பொருள் பணியின் போது தங்க நாக்குகள் கொண்ட மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எகிப்து இன்டிபென்டன்ட் பத்திரிகையின் அறிக்கையின்படி, இப்பகுதியில் உள்ள கல்லறைகள் பண்டைய காலத்தின் வெவ்வேறு காலகட்டங்களைச் சார்ந்தவை என்று தெரிய வந்துள்ளது.

எகிப்தின் பழமையை மேலும் கண்டறிய தொல்லியல் துறைக்கான உச்ச கவுன்சிலின் உத்தரவின் பேரில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது. 1989 இல் கண்டுபிடிக்கப்பட்ட தாலமிக் மற்றும் ரோமானிய காலங்களில் (கிமு 300 மற்றும் கிபி 640 க்கு இடையில்) ஆக்கிரமிக்கப்பட்டதாக கருதப்படும் இடத்தில் இருந்து தான் எடுக்கப்பட்ட மம்மிக்களை ஆய்வு செய்தனர்.

தோண்டியெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் சிலவற்றின் எலும்புகள் தங்கத்தில் மெருகூட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. அதுமட்டுமின்றி தங்கத்தில் தாமரை வடிவ ஸ்காராப்களோடு புதைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: கத்தாரில் அசத்தும் சென்னையை சேர்ந்த தெருவோரக் குழந்தைகள்..

சில மம்மிகளின் உடலின் நிலை நன்றாக இல்லை என்றாலும், தங்க முலாம்கள் இன்னும் அப்படியே இருப்பதாக எகிப்து இண்டிபென்டன்ட் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த சவப்பெட்டிகளில் பயன்படுத்தப்பட்ட சில மர பொருட்கள் மற்றும் செப்பு ஆணிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதேபோல் எகிப்தில் 2,000 ஆண்டுகள் பழமையான இடத்தில் தோண்டியபோது நாக்கு வடிவ ஆபரணத்துடன் கூடிய மண்டை ஓட்டைக் கண்டுபிடித்தது. சில மாதங்களுக்குப் பிறகு, ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உடல்கள் தங்க நாக்குகளுடன் கண்டுபிடிக்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் இந்த எலும்புக்கூடுகள் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று கூறுகின்றனர்.

எகிப்தின் சுற்றுலா மற்றும் தொல்பொருட்கள் அமைச்சகத்தின் கூற்றுப்படி, எகிப்து புதை படிவங்கள் ஒவ்வொரு மட்டத்திலும் ஒவ்வொரு பழக்கவழக்கங்கள் கொண்ட மம்மிகள் கிடைத்துள்ளன. ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருக்கிறது. பண்டைய எகிப்தின் பிற்பகுதியில், டோலமிக் காலத்திலும், ரோமானிய காலத்தில் இரண்டு கட்டங்களிலும் ஒரே கல்லறை மீண்டும் பயன்படுத்தப்பட்டது என்பதை இது குறிக்கிறது.

அன்றைய காலகட்டத்தில் நாக்கிற்கு கூட தங்க மூலம் பூசுவது, நாக்கிற்கு தங்க ஆபரணம் போடுவது பழக்கத்தில் இருந்ததை இது காட்டுகிறது. எகிப்து நாகரிகத்தின் செழிப்பையும் அவர்கள் உடலுக்கும் அழகிற்கும் கொடுத்த முக்கியத்துவத்தை இவை எடுத்துக்காட்டுகிறது.

First published:

Tags: Archeological site, Egypt, Mummy