ஹோம் /நியூஸ் /உலகம் /

யாருக்கு என்ன பதவி- அதிகார சண்டையில் தவிக்கும் தாலிபான்கள்!

யாருக்கு என்ன பதவி- அதிகார சண்டையில் தவிக்கும் தாலிபான்கள்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஈரான் மாடல்  அரசை இஸ்லாமிக் எமிரேட்ஸ்  ஆப் ஆப்கானிஸ்தானில் அமைக்க தாலிபான்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, அதிபரை விட அதிகாரம் பெற்றவராகவும் மதத் தலைவராகவும் சுப்ரீம் லீடர் ( உச்ச தலைவர்) இருப்பார்.

 • 2 minute read
 • Last Updated :

  ஆப்கானிஸ்தானின் புதிய அரசு தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிட தாலிபான்கள் திட்டமிட்டுள்ளனர். அதேவேளையில் முக்கியப் பதவிகள் தொடர்பான எழுந்துள்ள சச்சரவுகள் தாலிபான்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

  ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட அந்நிய நாட்டு படைகள் முழுமையாக வெளியேறியதையடுத்து புதிய அரசாங்கத்தை அமைக்க தாலிபான்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். புதிய அரசாங்கம் தொடர்பான அறிவிப்பு 2 தினங்களில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. அனைவரும்  ஒருங்கிணைந்த அரசாக புதிய அரசு அமையும் என்று தாலிபான்கள் கூறியிருந்தனர்.

  இதற்கிடையே புதிதாக அமையவுள்ள அரசில் முக்கியப் பதவிகளை கைப்பற்ற மிகப்பெரிய போட்டா போட்டி  நிலவுகிறது.  தாலிபான்களின் துணை அமைப்பான ஹக்கானி நெட்வொர்க் முக்கிய பதவிகளை கோரியுள்ள நிலையில்,  தாலிபான் அமைப்பை தொடங்கிய முகமது ஒமரின் மகன் முகமது யோக்கோபும் முக்கிய பதவிகளை பெற காய் நகர்த்தி வருகிறார்.

  ஈரான் மாடல்  அரசை இஸ்லாமிக் எமிரேட்ஸ்  ஆப் ஆப்கானிஸ்தானில் அமைக்க தாலிபான்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, அதிபரை விட அதிகாரம் பெற்றவராகவும் மதத் தலைவராகவும் சுப்ரீம் லீடர் ( உச்ச தலைவர்) இருப்பார்.

  மேலும் படிக்க: வான்வழிப் போக்குவரத்தை நிறுத்திய தாலிபான்கள்: தரைவழியாக அண்டை நாடுகளுக்கு படையெடுக்கும் ஆப்கானிஸ்தான் மக்கள்

  மௌலவி ஹிபதுல்லா அகுந்ஸாதா தாலிபான் இயக்கத்தின் முன்னாள் தலைமை நீதிபதி. 2016ம் ஆண்டு முதல் தாலிபான் இயக்கத்தின் தலைவர்,  அரசியல், மதம் மற்றும் ராணுவ விவகாரங்களில் முடிவெடுக்கும் அங்கீகாரம் படைத்தவராக உள்ளார். இவரே ஆப்கானிஸ்தானின் உச்ச தலைவராக அறிவிக்கப்படுவார் என்று கருதப்படுகிறது. இதுவரை இவர் பொதுவெளியில் தென்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கந்தகாரிலிருந்து அவர் செயலாற்றுவார் என்று கூறப்படுகிறது.

  இதையும் படிங்க: எங்களுடைய விஷயங்களில் யாரும் தலையிடக்கூடாது.. உலகிற்கு தாலிபான் சொல்லும் செய்தி !

  புதிய அரசில் ராணுவ பங்களிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று முகமது யோக்கோபு விரும்புவதாக கூறப்படுகிறது.  ஆனால் அரசியல் பங்களிப்பை ஏற்படுத்த வேண்டும் என்று சன்னி இஸாமிக் குழுவின் துணை நிறுவனரான முல்லா பரடர் விரும்புகிறார். அமெரிக்கப் படைகளுக்கு எதிராக போர் புரிந்தவர்களுக்கு  தோகாவில் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் கட்டளைகளை பிறப்பிக்க முடியாது என்று யாக்கோபு கூறியுள்ளார்.  முல்லா பரடர் மற்றும் ஷேர் முகமது ஸ்டானெக்ஸாய் ஆகியோர் தோஹாவில் இருந்து தலிபான்களின் அரசியல் அலுவலகத்தை கையாண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஹக்கானி நெட்வொர்க் காபூலையும் முல்லா யாகோப் கந்தகாரையும் கட்டுப்படுத்தி வருகின்றனர். தற்போது, ஆப்கான் ஆதரவு கந்தஹாரிகளையும் பாகிஸ்தான் ஆதரவு  ஹக்கானிகளை  தாலிபான்களின் புதிய அரசாங்கம் கொண்டிருக்குமோ என்ற கவலை எழுந்துள்ளது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Afghanistan, Taliban