மலேசியாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் முஹைதீன் யாசின்!

மலேசியாவின் புதிய பிரதமராக பதவியேற்றார் முஹைதீன் யாசின்!
8வது பிரதமராக முஹைதீன் பதவியேற்கும் முஹைதீன் யாசின்
  • Share this:
முகமது மஹாதிர் ராஜினாமா செய்த நிலையில், மலேசியாவின் 8-வது பிரதமராக முஹைதீன் யாசின் பதவியேற்றார்.

மலேசியாவில் கடந்த 2018ல் நடந்த பொதுத் தேர்தலில் மஹாதீர் முஹம்மதின் மலேசிய ஐக்கிய சுதேச கட்சியும், அன்வர் இப்ராஹிம் தலைமையிலான மக்கள் நீதிக் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றன. நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றுவிட்ட பின்னர், பதவியை அன்வரிடம் அளிப்பதாக மஹாதீர் ஒப்பந்தம் செய்திருந்தார்.

ஆனால், கூட்டணியில் ஏற்பட்ட திடீர் சலசலப்பு காரணமாக யாரும் எதிர்பாராத வகையில் மஹாதீர் திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து, முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் அந்நாட்டு மன்னர் சுல்தான் அப்துல்லாஹ் சுல்தான் அஹமது ஷா ஆலோசனை நடத்தினார்.


இதன் பின்னர், 72 வயதான முஹைதீன் யாசினை புதிய பிரதமராக மன்னர் அறிவித்தார். இப்போது அந்நாட்டின் 8வது பிரதமராக முஹைதீன் பதவியேற்றுள்ளார்.

தங்களுடைய கட்சிக்குப் பெரும்பான்மை இருக்கும் சூழலில் முஹைதீன் யாசினை பிரதமராக்கியதை மஹாதீர் முஹம்மது சட்டவிரோதமானது எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

Also see:

 

 
First published: March 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading