விவகாரத்து ஆனவர் என்பதால் பறிக்கப்பட்ட திருமதி இலங்கை கிரீடம் - போராடி வென்ற பெண்

திருமதி இலங்கை போட்டி

திருமதி இலங்கை எனும் அழகி போட்டியில் தன்னிடம் இருந்து பெறப்பட்ட கிரீடத்தை, புஷ்பிகா டி சில்வா என்பவர் போராடி மீண்டும் தனதாக்கியுள்ளார்.

 • Share this:
  இலங்கையின் கொழும்பு தாமரை தடாகம் அரங்கில், கடந்த 4ஆம் தேதி திருமதி இலங்கை எனும் அழகிப் போட்டி நடைபெற்றது. அதில், புஷ்பிகா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டு மகுடம் சூட்டப்பட்டார். ஆனால், போட்டியில் இரண்டாவது இடம் பிடித்த, கடந்த ஆண்டின் திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி என்பவர், புஷ்பிகா விவாகரத்து ஆனவர் என்பதால் அவர் வெற்றி பெற்றது செல்லாது என பேசினார். இதையடுத்து, மேடையிலேயே புஷ்பிகாவின் மகுடம் திரும்பப் பெறப்பட்டு, கரோலினுக்கு அணிவிக்கப்பட்டது.

  இதுதொடர்பாக புஷ்பிகா காவல்நிலையத்தில் புகாரளிக்க, நடுவரின் தீர்ப்பை மாற்ற கரோலினுக்கு உரிமை இல்லை என பலர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, திருமதி இலங்கைக்கான மகுடம் மீண்டும், புஷ்பிகாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: