• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • 150 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன எலி இனம் – ஆஸ்திரேலியாவில் மீண்டும் கண்டுபிடிப்பு!

150 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன எலி இனம் – ஆஸ்திரேலியாவில் மீண்டும் கண்டுபிடிப்பு!

 எலி

எலி

அமெரிக்காவின், தி நேஷனல் அகாடெமி ஆஃப் சயின்சஸ் புரொசீடிங்க்ஸ் அல்லது PNAS இன் ஜர்னலில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டது

  • Share this:
சமீபத்திய கண்டுபிடிப்பில், அழிந்துவிட்டதாகக் கருத்தப்பட்ட, ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட எலி இனத்தை, அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் கண்டறிந்துள்ளனர். கோல்ட்’ஸ் மைஸ் என்று கூறப்படும் இந்த பூர்வீக இனம், வட ஆஸ்திரேலியா தீவுகளில் வாழ்ந்து வந்ததாகவும் அறியப்பட்டுள்ளது.

இதுவரை, முழுவதுமாக அழிந்து போனதாக கருதப்படும் எட்டு பூர்வீக எலி இனங்கள் மற்றும் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் 42 தொடர்புள்ள இனங்களின் டிஎன்ஏ பரிசோதனை செய்தப்பட்டது. பரிசோதனையின் முடிவில், வட ஆஸ்திரேலியாவில் உள்ள சிறிய கடற்கரைத் தீவுகளில் காணப்படும் ஷார்க் பே மவுஸ் என்ற இனத்தோடு மிகவும் பொருந்துகிறது என்று தி கார்டியன் செய்தி வெளியிட்டது.

அமெரிக்காவின், தி நேஷனல் அகாடெமி ஆஃப் சயின்சஸ் புரொசீடிங்க்ஸ் அல்லது PNAS இன் ஜர்னலில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டது. ஐரோப்பியர்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்தவுடன், பூர்வீக இனங்கள் எவ்வாறு குறையத் தொடங்கின அல்லது அழிவதற்கான காரணம் என்ன என்பதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விஞ்ஞானிகளுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்கியுள்ளது.ஆஸ்திரேலியா தேசிய பல்கலைக்கழகத்தில், பரிணாம வளர்ச்சி உயிரியலாளராக பணியாற்றி வரும் எமிலி ராய்கிராப்ஃட் கூறுகையில், “1788 ஆம் ஆண்டில் ஐரோப்பிய காலனித்துவம் தொடங்கியதிலிருந்து அழிந்துபோன அனைத்து ஆஸ்திரேலிய பாலூட்டி உயிரினங்களில், 41 சதவிகிதம் பூர்வீக எலிகள் உள்ளன.”

பூர்வீக கொறிக்கும் இனங்கள் அழிவின் விகிதம் அதிகமாக காணப்படும் நிலையில், அழிந்ததாக கூறப்படும் பூர்வீக எலி இனங்கள் மீண்டும் உயிர்த்தெழுவது, ஒரு சாதகமான அறிகுறியாகக் காணப்படுகிறது, என்று அறிக்கை கூறுகிறது.

ALSO READ |  தேவாலயத்தில் புகுந்த முதலை - சர்ச்சையில் சிக்கிய பாதிரியார்!

இந்த இனங்களின் குறைவது அல்லது அழிவது , மனித இனங்கள் கலப்பினால் ஏற்படும் தாக்கமாகக் கூட இருக்கலாம். கிழக்கு ஆஸ்திரேலியப் பகுதிகளில், ஐரோப்பிய குடியேற்றத்திற்கு கோல்ட்ஸ் மவுஸ், Pseudomys gouldii, மிகவும் பரவலாகக் காணப்பட்ட உயிரினம் ஆகும். புகழ்பெற்ற ஆங்கில பறவையியலாளர் ஜான் கோல்ட்டின் மனைவி எலிசபெத்தின் பெயரிடப்பட்ட உயிரினம் இது. ஆனால், 1840 க்குப் பிறகு, பூனைகள் அறிமுகப்படுத்தபப்ட்ட காரணத்தால், இந்த இனம் மறைந்துவிட்டது.

இந்த எலிகள், வழக்கமாக காணப்படும் கருப்பு நிற எலிகளை விட அளவில் சிறியதாக இருக்கும். புதர்களுக்கு கீழே, 15 செமீ அளவில் பள்ளம் தோண்டி, சிறிய குழுக்களாக வாழும். சில வாரங்களுக்கு முன்னர், கிழக்கு ஆஸ்திரேலியாவில் சிறைச்சாலை அதிகாரிகள் மின்சார வயரிங் மற்றும் சுவர்களை பழுது பார்க்கும் போது, இறந்த கிடந்த எலிகளை அழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே போல, சுவர்கள் மற்றும் சீலிங்கில் இருந்த பெரிய அளவிலான எலிகள் கூட்டமும் வெளியேற்றப்பட்டன.

ALSO READ |  நயன்தாராவிற்கு திருமண ஏற்பாடு? முதலமைச்சருக்கு குவியும் புத்தகங்கள்! - இன்றைய கூகுள் ட்ரெண்டிங்

அடுத்த 10 நாட்களில், சுமார் 200 ஊழியர்கள் மற்றும் 420 கைதிகள், கிராமப்புற நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள வெலிங்டன் கரக்ஷன் மையத்திலிருந்து இப்பகுதியில் உள்ள பிற சிறைகளுக்கு மாற்றப்படுவார்கள், அதே நேரத்தில் சுத்தம் மற்றும் பழுதுபார்ப்பு நடைபெறும்."ஊழியர்கள் மற்றும் கைதிகளின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் நலம், எங்கள் முன்னுரிமையாகும், எனவே முக்கியமான சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள இப்போது சரியான செயல்பாடுகள் மிகவும் அவசியம் " என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Mouse
எலி


ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட, அதிகமாக தானியங்கள் பயரிடப்படும் மாநிலத்தில், பல மாதங்களாக மில்லியன் கணக்கான எலிகள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன, பயிர்கள் மற்றும் வைக்கோல்களை விழுங்குவதோடு வீடுகள், வணிகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சிறைச்சாலைகளையும் ஆக்கிரமித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: