சென்னை - விளாடிவோஸ்டோக் இடையே கடல்வழி போக்குவரத்து...!

கிழக்கு பொருளாதார மாநாட்டுக்கு தான் அழைக்கப்பட்டது தனக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை என மோடி தெரிவித்தார்

news18
Updated: September 5, 2019, 8:05 AM IST
சென்னை - விளாடிவோஸ்டோக் இடையே கடல்வழி போக்குவரத்து...!
மோடி | புதின்
news18
Updated: September 5, 2019, 8:05 AM IST
சென்னை - ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் இடையே கடல்வழி போக்குவரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், பிரதமர் மோடி - அதிபர் புடின் முன்னிலையில் கையெழுத்தானது.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். இதையடுத்து பிரதமர் மோடி மற்றும் புடின் முன்னிலையில் இருநாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

கிழக்கு பொருளாதார மாநாட்டுக்கு தான் அழைக்கப்பட்டது தனக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை என மோடி தெரிவித்தார். இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவு புதிய திசையில் பயணிப்பதற்கான வரலாற்று நிகழ்வாக இந்த சந்திப்பு அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தனக்கு ரஷ்யாவின் மிக உயரிய குடிமக்கள் விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்காக புடினுக்கும் ரஷ்ய மக்களுக்கும் நன்றி கூறிவதாக பிரதமர் தெரிவித்தார். இது 130 கோடி இந்திய மக்களுக்கு பெருமை அளிக்கக் கூடியது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
Loading...தொடர்ந்து மோடி மற்றும் புடின் முன்னிலையில் தொலைத்தொடர்பு, ஆழ்கடல் மற்றும் விண்வெளி ஆய்வு உள்ளிட்ட 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  குறிப்பாக சென்னையில் இருந்து ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் இடையிலான கடல்வழி போக்குவரத்தை மேம்படுத்துவது என புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருநாடுகள் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது, ராணுவ தளவாட உதிரி பாகங்கள் உற்பத்தியில் ஒத்துழைப்பு, சாலை போக்குவரத்து மற்றும் சாலை பராமரிப்பு, போக்குவரத்துக்கு இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவது, எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் புடின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, எந்த நாட்டின் உள்விவகாரத்திலும் மற்றொரு நாடு தலையிடுவதற்கு இந்தியாவும் ரஷ்யாவும் எதிராக உள்ளது என தெரிவித்தார்.இதனிடையே, இரண்டாவது உலகப்போரில் சோவியத் யூனியன் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், அதன் 75 வது ஆண்டுவிழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு புடின் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டுள்ளதாக வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

First published: September 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...